மத்தியப் பிரதேச மாநிலத்தின் குடும்ப நல அமைச்சகம், ஆணுறை பயன்படுத்த வேண்டிய அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சுகாதார பணியாளர்களை நியமித்துள்ளது.
அரசு சார்புத் தகவலின்படி, மத்தியத் பிரதேச மாநிலத்தில் கடந்த 9 வருடங்களில், ஆணுறைகளின் பயன்பாடு 76 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. 2008-2009 ஆம் ஆண்டுகளில் 11.8 லட்சம் ஆணுறைப் பயன்பாட்டாளர்கள், 2016-2017-இன் படி, 2.79 லட்சம் பேராக குறைந்துள்ளனர். மேலும், ஆண்களுக்கு செய்யப்படும் குடும்பக் கட்டுப்பாட்டு முறையான வேசக்டமி என்னும் முறையும், நடைமுறையில் 74% அளவுக்கு குறைந்துள்ளது.
குடும்பக் கட்டுப்பாட்டை பெண்கள் தான் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் இந்தியாவைப் பொறுத்தவரை தொடர்ந்து நிலவி வருகிறது. ஆணுறை குறித்தும், வேசக்டமி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த நாங்கள் முயற்சிக்கும் பல நேரங்களில், எங்களை மதிக்காமல், கேலி செய்யும் சம்பவங்கள் நடக்கின்றன என்று விழிப்புணர்வுப் பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.