அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்தார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்தார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்தார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
Published on

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கர் அதிகாரப்பூர்வமாக பாஜக கட்சியில் இன்று இணைந்தார்.

மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த மே மாதம் 30ஆம் தேதி பதவியேற்றது. இந்தப் புதிய அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளரான ஜெய்சங்கர் பதவியேற்றார். இந்த முறை தேர்தலில் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சாரான சுஷ்மா சுவராஜ் போட்டியிடவில்லை. இதனையடுத்து வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியில் யார் இருப்பார் என்று அதிக எதிர்பார்ப்புகள் எழுந்தன. 

இந்தச் சூழலில் முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளரான ஜெய்சங்கர் இந்தப் பதவிக்கு தேர்வானார். அவர் தேர்தலில் போட்டியிடாததால், ஆறு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தின் ஏதாவது ஒரு அவைக்கு உறுப்பினராக வேண்டும்.

இந்நிலையில் ஜெய்சங்கர் பாஜகவின் செயல் தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்தார். 1977ஆம் ஆண்டு ஐஎஃப்எஸ் அதிகாரியான இவர் இந்தியா- அமெரிக்கா மற்றும் இந்தியா-சீனா உறுவுகளில் பெரும் பங்காற்றினார். அத்துடன் இந்தியா- அமெரிக்கா 2008 அணு ஆயுத ஓப்பந்தத்தில் இவர் முக்கிய பங்கு வகித்தார். மோடி தலைமையிலான முந்தைய ஆட்சியில் வெளியுறவுத் துறை செயலாளராக பணிப்புரிந்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com