மத்திய அரசு பட்ஜெட் 2024 | எதிர்பார்ப்புகள் என்னென்ன? எந்த துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படும்?

சர்வதேச அளவில் பதற்றங்கள் அதிகரிக்கும் சூழலில், ஒவ்வொரு நாடும் பாதுகாப்புத் துறைக்குத்தான் கூடுதல் நிதியை ஒதுக்கி வருகின்றன. அப்படியான் சூழலில் இந்தியா தன் பட்ஜெட்டில் என்ன செய்யப்போகிறது? மத்திய அரசின் பட்ஜெட்டில் வரும் எதிர்பார்ப்புகள் என்னென்ன?
மத்திய அரசு பட்ஜெட்
மத்திய அரசு பட்ஜெட் முகநூல்
Published on

செய்தியாளர்: கௌசல்யா

சர்வதேச அளவில் பதற்றங்கள் அதிகரிக்கும் சூழலில், ஒவ்வொரு நாடும் பாதுகாப்புத் துறைக்குத்தான் கூடுதல் நிதியை ஒதுக்கி வருகின்றன. அந்தவகையில், இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறைக்கு ஒதுக்கப்பட்டு வரும் நிதி ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது. ஆனால், உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் கணக்கிட்டால் கடந்த 2 ஆண்டுகளாக சற்று குறைவாகவே இருக்கிறது.

பாஜக 2ஆவது முறையாக ஆட்சியைகைப்பற்றிய 2019-20 ஆம் நிதியாண்டின் மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கு 4,48,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இது அப்போது இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் 2.52 சதவிகிதமாக கணக்கிடப்பட்டிருந்தது.

2020-21ல் 4,71,000 கோடி ரூபாய், அதாவது உள்நாட்டு உற்பத்தியில் 2.88 சதவிகிதமாக இருந்தது. 2021-22ல் இத்துறைக்கு 4,78,000 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இதன் அளவு உள்நாட்டு உற்பத்தியில் 2.66 சதவிகிதம்.

2022-23ஆம் நிதியாண்டில் இத்துறைக்கு நிதி ஒதுக்கீடு 5,25,000 கோடி ரூபாயாக உயர்ந்தது. இருப்பினும், அந்த ஆண்டில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் இது 2.21 சதவிகிதம் மட்டுமே. 

மத்திய அரசு பட்ஜெட்
மகாராஷ்டிரா: கைகோர்த்தபடி சென்ற தந்தை, மகன்... திடீரென ரயில் முன் எடுத்த விபரீத முடிவு!

2023-24 ஆம் நிதியாண்டில் 5,93,000 கோடி ரூபாய் ஒதுகீடுசெய்யப்பட்டிருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் இடைக்கால பட்ஜெட்டில் 6,21,000 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. ஆனால், உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியுடன் கணக்கிட்டுப் பார்த்தால் இத்துறைக்கு ஒதுக்கீடு கடந்த ஆண்டுகளைவிட சற்று குறைவுதான்.

அண்டை நாடுகளில் பாதுகாப்புத்துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு?

நம் அண்டை நாடான சீனாவில் பாதுகாப்புத்துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது தெரியுமா? உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சீனாதான் அதிகளவு நிதியை ஒதுக்குகிறது இத்துறைக்கு. 2024ஆம் ஆண்டில் சீனா பாதுகாப்புத்துறைக்கு சுமார் 18,50,000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இது, 2015ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதியைவிட இருமடங்கு கூடுதல் என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள மற்றொரு அண்டை நாடான பாகிஸ்தானில் பாதுகாப்புத்துறைக்கு அந்நாட்டின் ரூபாய் மதிப்பில் 2,12,200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது இந்திய ரூபாய் மதிப்பில், 63,517 கோடி ரூபாய் மட்டுமே. அதேபோல, பங்களாதேஷில் பாதுகாப்புத் துறைக்கு சுமார் 29,880 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருப்பது புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.

மத்திய அரசு பட்ஜெட்
“இஸ்லாமிய பெண்கள் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் ஜீவனாம்சம் பெற முடியும்” உச்சநீதிமன்றம்

’ஆத்மநிர்பார்' திட்டத்தின் கீழ்பாதுகாப்பு உபகரணங்களை உள்நாட்டில் தயாரிப்பதை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.  5 ஆண்டுகளில் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி 8 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த நிதியாண்டில் 1,27,000 கோடி ரூபாய் மதிப்பில் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், இதுவரை இல்லாத அளவாக 21,083 கோடி ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. இந்நிலையில், எதிர்வரும் பட்ஜெட்டிலும் பாதுகாப்புத் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com