“வரலாறு உருவாகும்... 10 ஆண்டுகளானாலும் சிறையில் இருக்கதயார்” - இன்ஜினியர் ரஷீத்

காஷ்மீர் தேர்தலில் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது அவாமி இத்திஹாத் கட்சி.
இன்ஜினியர் ரஷீத்
இன்ஜினியர் ரஷீத்pt web
Published on

காஷ்மீர் தேர்தலில் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது அவாமி இத்திஹாத் கட்சி. பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்த குற்றச்சாட்டில் சிறையில் இருந்த அக்கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான இன்ஜினியர் ரஷீத் பிணையில் வந்து தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். அவருடன் நமது டெல்லி தலைமை செய்தியாளர் நடத்திய பிரத்யேக உரையாடல்...

"ஐந்தரை ஆண்டுகளுக்கு பின் காஷ்மீர் திரும்பியுள்ளீர்கள். மாற்றம் தெரிகிறதா?"

"அடக்குமுறைகள் அதிகரித்துள்ளதே 5 ஆண்டுகளில் நான் கண்ட மாற்றம். காஷ்மீரிகளுக்கு உதவ யாருமே இல்லை. மோடியின் அடக்குமுறைகள்தான் அரங்கேறிக் கொண்டுள்ளது."

இன்ஜினியர் ரஷீத்
கர்நாடகா | இளைஞரை நிர்வாணப்படுத்தி தாக்கிய ரவுடி.. சுட்டுப்பிடித்த காவல்துறை

"மக்கள் உங்களிடம் என்ன கூறுகிறார்கள்?"

"இது சமூக ஊடக காலம். மக்கள் அதில் நேரடியாகவே தங்கள் கருத்துகளை கூறுகின்றனர். அவர்கள் என்ன கூறுகின்றனர் என்பது என்னை விட உங்களுக்கு நன்றாகவே தெரியும். அவர்களின் கருத்துகள் வாக்குகளாக மாறும்... வரலாறு உருவாகும் என நம்புகிறேன்."

"உங்கள் அவாமி இத்திஹாத் கட்சியிடம் மக்கள் எதை எதிர்பார்க்கிறார்கள்?"

"புதிய காஷ்மீர் அமைய வேண்டும் என அவர்கள் விரும்பினால் அது தங்கள் சொந்த சித்தாந்தங்கள் படி இருக்க வேண்டும் என விரும்பினால் அதற்கு எங்கள் கட்சியை விட்டால் வேறு வாய்ப்பு இல்லை. தேர்தலில் நாங்கள் வெற்றிபெறாவிட்டால் அது காஷ்மீரிகளின் துரதிர்ஷ்டம் என்றே கூற வேண்டும். ஆனால் வெற்றி கிடைக்கும் என்றே நான் நம்புகிறேன்"

இன்ஜினியர் ரஷீத்
ட்ரம்ப் மீதான கொலை முயற்சி குறித்த சர்ச்சை பதிவு... எழுந்த எதிர்ப்பு... பணிந்த எலான் மஸ்க்!

"நீங்கள் செல்லுமிடமெல்லாம் அமோக ஆதரவு கிடைப்பது தெரிகிறது. காஷ்மீரின் எதிர்கால முதல்வராக வேண்டும் என மக்கள் கூறுகிறார்களே?"

"34 ஆண்டுகளில் ஒரு லட்சம் பேர் மாண்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் சிறைவாசம் அனுபவித்தனர். ஒரு நல்ல தலைவர் உருவானால் மட்டுமே எங்கள் தேவைகள் குறித்து இந்திய அரசுக்கு நெருக்கடி தர முடியும். எங்கள் வழியில் பேச்சுவார்த்தைக்கு வர வைக்க முடியும். சுயேச்சை எம்எல்ஏவான எனக்கு அமைச்சர் பதவி தர முந்தைய முதலமைச்சர்கள் முன் வந்தனர். நான் நினைத்திருந்தால் மோடியை ஆதரித்து மத்திய அமைச்சராகியிருக்க முடியும். ஆனால் என் நோக்கம் அதுவல்ல... காஷ்மீர் மக்களின் வாழ்வுரிமை காக்கப்பட வேண்டும்... சுய மரியாதை மீட்கப்பட வேண்டும் என்பதே என் இலக்கு!"

இன்ஜினியர் ரஷீத்
“பெரியாரை தாண்டி பெரியாரை மீறி... அரசியல் செய்ய முடியாது” அமைச்சர் உதயநிதி

"ரஷீத்துக்கு எப்படி பிணை கிடைத்தது? அவருக்கு எப்படி பணம் கிடைக்கிறது என உமர் அப்துல்லா போன்றோர் கேள்வி எழுப்புகின்றனரே?"

"இதற்கு பதிலை தெரிந்துகொள்வது கடினமல்ல... பட்டியாலா நீதிமன்ற நீதிபதியிடம் கேளுங்கள் பதில் சொல்வார். உமர் அப்துல்லா காஷ்மீரிகளை முட்டாள்கள் என கருதுகிறார். ஆனால் அவர் கடந்த முறை 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றார். எனது பிணைக்காக இந்திய அரசு அழுத்தம் தரவில்லை. நான் எந்த தவறும் செய்யவில்லை. போலியான குற்றச்சாட்டின் பேரில் என்னை சிறையில் வைத்துள்ளார்கள். எம்.பி.ஆன பிறகும் கூட 4 மாதங்கள் சிறையில் வைத்திருந்தனர். இது இந்திய ஜனநாயகத்திற்கு அவமானம். நான் சிறையில் இருந்ததால் வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியவில்லை. வேட்புமனு தாக்கல் தொடங்கி 4 நாட்களுக்கு பின்பே எனக்கு பிணை கிடைத்தது. முன்பே எனக்கு பிணை கொடுத்திருந்தால் நிலைமையே மாறியிருக்கும். பாஜக என்னை ஊக்குவிப்பதாக இருந்தால் 15 நாட்களுக்கு முன்பே பிணை கிடைத்திருக்குமே..."

இன்ஜினியர் ரஷீத்
அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி.. சந்திக்க விருப்பம் தெரிவித்த ட்ரம்ப்!

"ஜமாத் இ இஸ்லாமி கட்சியுடன் கூட்டு வைத்துள்ளீர்களே?"

"இதில் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஜமாத் கட்சி தடை செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் அந்த கட்சியை சேர்ந்தவர்களின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளதே. இது அவர்கள் தவறானவர்கள் இல்லை என காட்டுகிறது.இதன் காரணமாகவே அவர்களுடன் கூட்டு வைக்க முன் வந்தேன். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை இந்தியா கூட்டணி தேர்தல் அறிக்கையில் சேர்க்க ராகுல் காந்தியிடம் கேட்டுக்கொண்டேன். அது ஏற்கப்பட்டிருந்தால் எங்கள் கட்சி வேட்பாளர்களை வாபஸ் பெற்றிருப்பேன்"

"பிணை முடிந்து அக்டோபர் 3ஆம் தேதி சிறைக்கு திரும்ப உள்ளீர்கள். அப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?"

"இறைவன் எனக்கு வலிமையை கொடுத்துள்ளான். 10 ஆண்டுகளானாலும் சிறையில் இருக்கத்தயார். காஷ்மீர் மக்களின் வாழ்வுரிமை மீட்கப்பட வேண்டும். சுய மரியாதை, கவுரவம் காக்கப்பட வேண்டும். அவர்கள் தியாகங்கள் மதிக்கப்பட வேண்டும். நான் சிறையில் இருந்தாலும் வீட்டில் இருந்தாலும் காஷ்மீருக்காக குரல் கொடுத்துக்கொண்டே இருப்பேன்."

இன்ஜினியர் ரஷீத்
ஜாபர் சாதிக், இயக்குனர் அமீர் உள்பட 12 பேருக்கு எதிராக ED குற்றப்பத்திரிகை தாக்கல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com