"ஏழை விவசாயியின் மகனான நான் விவசாயிகளுக்கு எனது ஆதரவை தெரிவிக்க வந்திருக்கிறேன். என் தந்தை, சகோதரன், சகோதரிகள் என குடும்பத்தினர் அனைவரும் போராடுகிறார்கள்” என்று கூறுகின்றார் டெல்லி போராட்ட களத்தில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரர்.
"ஏழை விவசாயியின் மகனான நான் விவசாயிகளுக்கு எனது ஆதரவை தெரிவிக்க இங்கு வந்திருக்கிறேன். என் தந்தை, சகோதரன், சகோதரிகள் என குடும்பத்தினர் அனைவரும் போராடுகிறார்கள். நாங்கள் எல்லையில் நாட்டை காவல் காக்கிறோம். அது போலத்தான் அவர்களும் நாட்டை ஊருக்குள் இருந்து பசி, பட்டினியில் இருந்து காக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் அது எங்களுக்குத்தான். விவசாயிகள் போராடும்போது நாங்கள் வீட்டில் உட்கார முடியுமா?” என்கிறார் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர்.
இந்தப் போராட்டம் அமைதியான முறையில் நடந்துவருகிறது. வேளாண்சட்டத்தை ரத்து செய்வதையே இவர்கள் கேட்கிறார்கள். போராட்டத்தை சிலர் தவறாக திரித்துக் கூறுகிறார்கள். இது விவசாயிகளின் போராட்டம். அதில் அரசியல் கட்சிகள் பங்களிக்க எதுவும் இல்லை. விவசாயிகளுக்கு ஆதரவாக அனைவரும் ஆதரவு தெரிவிக்கிறார்கள். எங்களைப்போன்றவர்கள் மட்டுமின்றி காவல்துறையினரும் ஆதரிக்கிறார்கள் என ஒருமித்த குரலில் உரக்க சொல்கிறனறனர் போராட்டத்தில் பங்கெடுத்துள்ள முன்னாள் ராணவு வீரர்கள்.