இந்திய அரசியலில் தனித்தன்மை கொண்ட ஆளுமைகளுள் ஒருவர் வி.பி. சிங். இட ஒதுக்கீட்டுப் போராளி என்றும் இவரை அழைக்கிறார்கள். ஜவஹர்லால் நேரு காலத்தில் காங்கிரஸில் இணைந்து அரசியலில் ஈடுபடத் தொடங்கிய வி.பி.சிங்கின் முழுப் பெயர் விஸ்வநாத் பிரதாப் சிங். உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சராகவும், இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோர் தலைமையிலான மத்திய அரசில் அமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார்.