“சிதம்பரம் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை விற்பனை செய்த தீட்சிதர்கள்” - ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல்!

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்ததாகக் கூறி அதற்கான ஆதாரங்களை சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கையாக இந்து சமய அறநிலையத் துறை தாக்கல் செய்தது.
சிதம்பரம் நடராஜர் கோவில், சென்னை உயர் நீதிமன்றம்
சிதம்பரம் நடராஜர் கோவில், சென்னை உயர் நீதிமன்றம்pt web
Published on

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்ததாகக் கூறி அதற்கான ஆதாரங்களை சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கையாக இந்துசமய அறநிலையத் துறை தாக்கல் செய்தது.

சிதம்பரம் நடராஜர் கோயில் வருவாய் கணக்கை தாக்கல் செய்யக்கோரி இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் சுரேஷ்குமார், சவுந்தர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது பொது தீட்சிதர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கோயில் நிலங்கள் எதுவும் தீட்சிதர்கள் வசமில்லை. நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்ததாக அறநிலையத் துறை கூறும் குற்றச்சாட்டு துரதிருஷ்டவசமானது” என வாதிட்டார். இதனையடுத்து, அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் 1974, 1985 மற்றும் 1988ஆம் ஆண்டுகளில் தீட்சிதர்களால் விற்கப்பட்டுள்ளதற்கு ஆதாரங்கள் உள்ளது” எனக் கூறி அது குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார்.

அதில், கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் சிறப்பு தாசில்தார் கட்டுப்பாட்டில் எவ்வளவு உள்ளன, கட்டளைதாரர்கள் கட்டுப்பாட்டில் எவ்வளவு நிலங்கள் உள்ளன என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

சிதம்பரம் நடராஜர் கோவில், சென்னை உயர் நீதிமன்றம்
தவெக மாநாடு|கோயிலில் பூஜை செய்த ரசிகர்கள்.. ’ஆட்சி அமைப்பது’ குறித்து தந்தை சந்திரசேகர் சொன்ன பதில்!

இதனையடுத்து அறநிலையத் துறை அறிக்கைக்கு பதில் அளிக்க பொது தீட்சிதர்கள் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com