யூரோ கோப்பை: சாதனைகளும் சறுக்கல்களும் - ஓர் அலசல்

யூரோ கோப்பை: சாதனைகளும் சறுக்கல்களும் - ஓர் அலசல்
யூரோ கோப்பை: சாதனைகளும் சறுக்கல்களும் - ஓர் அலசல்
Published on

யூரோ கோப்பை கால்பந்து போட்டி தொடர்பான சாதனைகள், சறுக்கல்கள், மாற்றியமைக்கப்பட்ட விதிமுறைகள் உட்பட முக்கிய நிகழ்வுகளை இங்கு பார்க்கலாம்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் யூரோ கோப்பை கால்பந்து போட்டி கடந்த ஆண்டே (2020) நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா நோய் பரவல் காரணமாக போட்டிகள் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனால் யூரோ 2020 என்ற டைட்டிலுடன் இந்தப் போட்டிகள் நடைபெறுகிறது.

> 1960ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் இந்த யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் 60வது ஆண்டை முன்னிட்டு மிகவும் சிறப்பாக நடத்த வேண்டும் என திட்டமிட்டு, 11 நாட்டில் உள்ள 11 நகரங்களில் இந்த கால்பந்து போட்டிகள் நடைபெற்றது. இந்த 11ஆம் நம்பர் பேன்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக 11 நாடுகள், 11 நகரங்கள் என பிரபலப்படுத்தி இந்த போட்டிகள் நடைபெற்றன.

> யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் ஆரம்ப கட்டத்தில் நான்கு அணிகள் மட்டுமே இடம்பெற்று விளையாடிய நிலையில் தற்போது 24 அணிகள் கலந்துகொண்டு விளையாடின. இந்த 24 அணிகளும், ஒரு பிரிவுக்கு நான்கு அணிகள் வீதம் மொத்தம் ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் போட்டிகள் நடைபெற்றன.

> யூரோ கோப்பை போட்டிகள் நடைபெறும் ஒவ்வொரு மைதானத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு. அந்த வகையில் விம்பிளி ஸ்டேடியம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சிறந்த சர்வதேச கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்றிருக்கிறது. இந்தப் போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்றுள்ளதால் இதை இந்த மைதானத்திற்கான கௌரவமாக கருதுகின்றனர்.

> இந்த யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் பிஃபா-வின் அங்கீகாரத்தோடு அடிடாஸ் பந்துகள் பயன்படுத்தப்பட்டன. இந்த அடிடாஸ் யுனிபோரியா பந்துகள் 2018-ல் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு பயன்படுத்தப்பட்ட பந்துகள் போலத்தான் இதுவும், ஒயிட் கலர் பந்தில் கலர் ஃபுல்லான கோடுகளுடன் பிளாக் ஸ்ரோக்குடன் அடிடாஸ் நிறுவனத்தார் இந்த பந்தை தயாரித்திருக்கிறார்கள்.

> கால்பந்து போட்டியை பொறுத்தவரை விதிப்படி மூன்று மாற்று ஆட்டக்காரர்களை மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில் இந்த யூரோ கோப்பை போட்டியில் 5 மாற்று ஆட்டக்காரர்களை களமிறக்க அனுமதிக்கப்பட்டனர். இந்த விதிப்படி வருகின்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியிலும் தொடரும் என பிஃபா அறிவித்துள்ளது.

> ஒரு கால்பந்து போட்டியில் கலந்துகொள்ளும் அணியில் மொத்தம் 23 வீரர்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்பது விதி. ஆனால், கொரோனா காலம் என்பதால் எது வேண்டுமானலும் நடக்கலாம் என்ற அடிப்படையில் 23 வீரர்கள் என்பதை 26 வீரர்களாக அதிகரித்திருந்தனர். அதன்படி ஒவ்வொரு அணியிலும் 26 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

> ஒவ்வொரு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கும் ஒவ்வொரு பாடல் இடம்பெறும் (Official Song) அதேபோல இந்த யூரோ கோப்பை கால்பந்து போட்டிக்கு மார்டின் கேரிக்ஸ் என்பவர் பாடிய வி ஆர் த பீப்புல் என்ற பாடலை Official Song-ஆக பயன்படுத்தினர்.

> இந்த போட்டியில் (VAR - Video Assistant Refree) என்ற விதியை பயன்படுத்தி இருக்கிறார்கள். இதில், கோல்லைன் டெக்னாலஜி, பெனல்டி ஏரியா, ஆப்சைட், கோலா கோல் இல்லையா, மற்றும் நடுவரின் பார்வையில் இருந்து தப்பிய விஷயங்கள் அனைத்தையும் மிகவும் துல்லியமாக அறிய இந்த விதியை பின்பற்றினார்கள். இந்த முக்கியமான பணியை வீடியோ துணை நடுவருடன் மேலும் இரண்டு துணை நடுவர்கள் இருப்பார்கள். இவர்கள் வீடியோ மூலம் துல்லியமாக கணித்து விரைவாக சரியான முடிவை அளித்தனர்.

>  டென்மார்க் - பின்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் டென்மார்க் வீரர் எரிக்சன் மயங்கிவிழுந்தார். இதையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். இதையடுத்து மெடிக்கல் எமர்ஜென்சி என்று அறிவிக்கப்பட்டு போட்டி நிறுத்தப்பட்டது. ஆனால், இரண்டு அணி வீரர்கள் மற்றும் ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று போட்டி நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து மீண்டும் தொடங்கி நடைபெற்றது. இப்போட்டியில் டென்மார்க் அணி 1:0 என்ற கோல் கணக்கில் பின்லாந்து அணியை வென்றது. இதுபோன்று போட்டி நிறுத்தப்பட்டு மீண்டும் நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து நடைபெற்றது இதுவே முதன்முறை.

> யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இவர் இதுவரை 14 கோல்கள் அடித்துள்ளார். சர்வதேச அளவில் 109 கோல்களை அடித்துள்ள இவர் ஈரான் அணி வீரர் அலி-டே சாதனை சாமன் செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com