பிஎஃப் சேமிப்பு பணத்திற்கான வட்டி 0.1 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அறக்கட்டளை கூட்டத்தில் பிஎஃப் சேமிப்பு பணத்திற்கான வட்டி 0.1 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி, வரும் மார்ச் மாதத்துடன் முடியும் 2018 - 19ம் நிதியாண்டில் பிஎஃப் வட்டி 8.65% ஆக இருக்கும்.
பிஎஃப் வட்டியை உயர்த்தும் அரசின் முடிவால் 6 கோடி தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். பிஎஃப் அறக்கட்டளையின் முடிவுக்கு அடுத்தாக மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் தெரிவிக்கும். அதன் பின் மார்ச் இறுதியில் வட்டிப்பணம் தொழிலாளர்களின் கணக்கில் சேர்க்கப்படும்.
2013-14 மற்றும் 2014-15ம் ஆண்டுகளில் பிஎஃப் பணத்திற்கு 8.75% வட்டி வழங்கப்பட்டது. 2015-16ல் இது 8.8% ஆக அதிகரித்தது. 2016-17ல் இது 8.65% ஆக குறைக்கப்பட்டு 2017-18ல் அது மேலும் குறைக்கப்பட்டு 8.55% ஆக்கப்பட்டது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் வட்டி 8.65% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.