தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி திட்டத்தினை ஊழியர்களுக்கு வழங்குகின்றன. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது, ஒரு குறிப்பிடத்தக்க ஓய்வூதிய சேமிப்பு திட்டமாக உள்ளது. இதன்மூலம் மத்திய அரசு உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட வட்டியில், ஊழியர்கள் பணியைவிட்டுச் செல்லும்போது அந்தத் தொகையினை எடுத்துக்கொள்ளலாம். இதனை தொழிலாளர்கள் விரும்பும்போது எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். இந்த பிஎஃப் தேவைப்படாதபட்சத்தில், ஓய்வுக்குப் பின்பும் எடுத்துக்கொள்ளலாம்.
இந்த நிலையில், வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்களின் கணக்கில் வட்டி, வரவு வைக்கப்பட்டிருப்பதாக இ.பி.எஃப்.ஓ தெரிவித்துள்ளது. இ.பி.எஃப் பங்களிப்பு மாதாந்திர அடிப்படையில் கணக்கில் வரவு வைக்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் வட்டி கணக்கிடப்படுகிறது. ஆண்டிற்கான மொத்த வட்டி நிதியாண்டின் இறுதியில் வரவு வைக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில், மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின்கீழ் வரும் இ.பி.எஃப்.ஓ இன் மத்திய அறங்காவலர் குழு, நிதியாண்டிற்கான வட்டி விகிதத்தை தீர்மானித்து வருகிறது. பின்னர் இந்த விகிதம் நிதி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்படுகிறது. இதனையடுத்து, தொழிலாளர் அமைச்சகம் மற்றும் இ.பி.எஃப்.ஓ ஆகியவை ஊழியர்களின் கணக்குகளில் வட்டியைச் செலுத்த தொடங்குகின்றன. அந்த வகையில், கடந்த நிதியாண்டில் 7.59% ஆக இருந்த வட்டி விகிதம், இந்த ஆண்டு 8.15% ஆக உயர்த்தப்பட்டது.
இதையும் படிக்க: சுழன்று அடித்த சூறாவளி... கடல் நீரில் மிதந்த கார்கள்... அலறிய பொதுமக்கள்
இந்த நிலையில், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், கடந்த ஆண்டுகளில் இபிஎஃப்ஓவின் வளர்ச்சி குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும் இந்த ஆண்டு பிஎஃப் தொகைக்கு 8.15% வட்டி தருவதாகவும், ஏற்கெனவே 24 கோடிக்கும் அதிகமான கணக்குகளில் வட்டி வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதாவது, தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே 24 கோடி ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகளில் இந்த வட்டி தொகை டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்த தகவலை இணையதளம், UMANG APP மற்றும் 1800118005 என்ற எண்ணில் தொடர்கொண்டு அறியலாம். இபிஎஃப்ஒ மிஸ்டு கால் வசதி மூலமாகவும், SMS சேவை மூலமாகவும் பேலன்ஸ் தொகை குறித்த விவரத்தை தெரிந்துகொள்ள முடியும். பிஎஃப் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளமான epfindia.gov.in சென்று கணக்கில் உள்ள இருப்புத்தொகையை தெரிந்துகொள்ளலாம். இந்த இணையதளத்தில் சந்தாதாரர்களுக்கான சேவை என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்து, அதில் உறுப்பினர் பாஸ்புக் என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு passbook.epfindia.gov.in என்ற பகுதி வரும். இங்கு சந்தாதாரரின் UAN எண் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளே செல்ல வேண்டும். அதன்பிறகு உங்களின் பாஸ்பேக் பேலன்ஸை தெரிந்துகொள்ளலாம்.
இதையும் படிக்க: ஐ.நா. சபையில் இஸ்ரேலுக்கு எதிராக இந்தியா வாக்களிப்பு