எகிப்து குண்டு பெண் இன்று டிஸ்சார்ஜ்! நர்ஸ் கண்ணீர்

எகிப்து குண்டு பெண் இன்று டிஸ்சார்ஜ்! நர்ஸ் கண்ணீர்
எகிப்து குண்டு பெண் இன்று டிஸ்சார்ஜ்! நர்ஸ் கண்ணீர்
Published on

உடல் பருமனை குறைக்க மும்பையில் சிகிச்சை பெற்று வந்த குண்டு பெண் இமான் அகமது, இன்று டிஸ்சார்ஜ் ஆகிறார்.

எகிப்து தலைநகர் கெய்ரோவை சேர்ந்த பெண் இமான் அகமது (வயது 36). 500 கிலோ எடை கொண்ட இவர், படுத்த படுக்கையாகவே இருந்தார். உலகின் அதிக எடை கொண்ட பெண்ணாக கருதப்பட்ட இவரது உடலை எடையை குறைக்க, மும்பை தனியார் ஆஸ்பத்திரியை சேர்ந்த டாக்டர் முபஷல் லக்டாவாலா முன் வந்தார். இதைத்தொடர்ந்து, தனி விமானத்தில் இமான் மும்பை அழைத்துவரப்பட்டார். அவருக்கு சிகிச்சைத் தொடர்ந்தது. அவரது உடல் எடை குறைந்ததை அடுத்து, இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்.

இதுபற்றி டாக்டர் முபஷல் லக்டாவாலா கூறும்போது, ’இமான் அகமதுவின் உடல் எடை 177 கிலோவாக குறைந்துவிட்டது. அவர் நன்றாக இருக்கிறார். நாளை (இன்று) டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். சிகிச்சைக்காக இதுவரை ரூ.3 கோடி செலவாகி இருக்கிறது. இருந்தாலும், அவரிடம் இருந்து நாங்கள் ஒரு பைசா கூட பெறவில்லை. ரூ.65 லட்சம் நன்கொடை கிடைத்தது’ என்றார்.

இதற்கிடையே அவரை உடனிருந்து கவனித்துக்கொண்ட செவிலியர்கள், அவரை விட்டுப் பிரிவதால் கண்ணீர் விட்டுள்ளனர். ‘இமானை நாங்கள் ஸ்வீட்டி என்றே அழைத்தோம். கடந்த இரண்டு மாதங்களாக அவருடன் இருந்த நாட்கள் சுகமானவை. அவர் எங்களுக்கு அரபி வார்த்தைகள் சொல்லிக்கொடுத்தார். டிஸ்சார்ஜ் ஆகும் அவருக்கு நாங்கள் பிரிவு உபச்சார விழா நடத்த இருக்கிறோம். அவர் எங்கள் வாழ்க்கையில் ஒருவராகிவிட்டார்’ என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com