அமெரிக்க நிறுவனமான டெஸ்லாவின் எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளன. அதை உறுதிப்படுத்தும் விதமாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அலுவலகம் அமைத்துள்ளது டெஸ்லா. இதை டெஸ்லா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்த நிலையில் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்கும் ட்வீட் செய்துள்ளார்.
இந்தியாவின் 5 மாநிலங்களில் ஷோரூம் அமைக்கவும், ரிசர்ச் மற்றும் டெவெலப்மென்ட் விருத்தி மையம் மற்றும் உற்பத்தி கூடம் அமைக்கவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டெஸ்லா தெரிவித்துள்ளது. இப்போதைக்கு டெஸ்லா கார்களின் விலை அதிகமாக இருந்தாலும் இந்தியாவில் கார்களை தயாரிக்க தொடங்கினால் விலையில் நிச்சயம் மாற்றம் இருக்கும் எனவும் டெஸ்லா நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெஸ்லா கார்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வது குறித்து அதன் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் பலமுறை ட்வீட் செய்துள்ளார். அதில் கடந்த 2020இல் ‘அடுத்த ஆண்டு இந்தியாவில் நிச்சயம் டெஸ்லா கால்பாதிக்கும்’ என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தான் ‘உறுதி அளித்ததை போல்’ என சொல்லி அவர் ட்வீட் செய்துள்ளார்.