கேரளாவில் கிணற்றில் விழுந்த யானையை கிராமத்தினர் உதவியுடன் வனத்துறை அதிகாரிகள் மீட்ட சம்பவம் நெகிழ வைத்துள்ளது.
மனிதர்கள் தோண்டும் குழிகளிலும் கிணறுகளிலும் வழிதவறி வரும் யானைகள் விழுந்து உயிருக்குப் போராடிய நிலையில் வனத்துறையினர் மீட்கும் சம்பவங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கிறன. சமீபத்தில் கூட கர்நாடகாவின் கூர்க் மலைப்பகுதியில் பள்ளத்தில் விழுந்த யானையை ஜேசிபி எந்திரம் மூலம் மீட்ட வீடியோ சமூக வலைதங்களில் பரவி நெகிழ்ச்சியூட்டியது.
அதேபோல, இன்று கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தின் அடந்த வனப்பகுதியான குட்டம்புழா அருகே கிணற்றில் விழுந்த யானையை கிராமத்தினர் உதவியுடன் ஜே.சி.பி இயந்திரம் மூலம் வனத்துறையினர் மீட்டுள்ளனர்.