வாழைப்பழத்தை தராமல் ஏய்த்த பாகன் - தூக்கிப்போட்டு மிதித்தே கொலைசெய்த யானை!

வாழைப்பழத்தை தராமல் ஏய்த்த பாகன் - தூக்கிப்போட்டு மிதித்தே கொலைசெய்த யானை!
வாழைப்பழத்தை தராமல் ஏய்த்த பாகன் - தூக்கிப்போட்டு மிதித்தே கொலைசெய்த யானை!
Published on

தனக்கு வாழைப்பழம் கொடுக்கவில்லை என்ற கோபத்தில் யானை ஒன்று பாகனை தூக்கிப்போட்டு மிதித்து கொன்ற சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் செயோனி மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. செயோனி தலைநகரிலிருந்து 20 கி.மீ தொலைவிலுள்ள ரஹிவாடா கிராமத்தைச் சேர்ந்தவர் பரத் வாசுதேவ். இவர் ஹீரா என்ற பெண் யானையை வைத்து ஊர் ஊராகச் சென்று யாசகம் பெற்று பிழைப்பு நடத்திவந்துள்ளார். அதுபோல் ஒரு ஊருக்குச் செல்லும் வழியில், வாழைப்பழங்களை ஏற்றிவந்த லாரி ஓட்டுநர் ஒருவர் யானைக்கு கொடுக்கச்சொல்லி சில சீப்பு வாழைப்பழங்களை கொடுத்துச் சென்றுள்ளார். ஆனால் பரத் அதை யானைக்குக் கொடுக்காமல் தனது பைக்குள் வைத்துள்ளார்.

இதனைப் பார்த்து கோபமடைந்த யானை, பரத்தை தனது தும்பிக்கையால் தூக்கி சாலையில் அடித்து, காலால் மிதித்து கொன்றுபோட்டது. இதனை பரத்துடன் சென்ற உதவியாளர் ஒருவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மேலும் பரத்தை மருத்துவனைக்கு கொண்டுசென்றதாகவும், ஆனால் அதற்கு முன்பே அவர் இறந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் கூறிவிட்டனர். மேலும் இதுபோல் யானை இதற்கு முன்பு நடந்து கொண்டதேயில்லை என்றும் உடனிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com