மின்சார வாகனங்கள் மணிக்கு 20 கிலோ மீட்டருக்கும் குறைவான வேகத்தில் பயணிக்கும் போது எச்சரிக்கை ஒலி எழுப்பும் வகையில் தயாரிக்கப்படவேண்டும் என்ற புதிய விதிமுறை விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது. பெட்ரோல், டீசலால் இயக்கப்படும் வாகனங்களில் இருந்து வெளிவரும் சத்தத்தைவிட, மின்சார வாகனங்களில் இருந்து வெளிவரும் சத்தம் குறைவுதான். அவை குறைந்த வேகத்தில் பயணிக்கும் போது சத்தம் கேட்காது.
இதனால் சாலையில் நடந்துசெல்வோர், சைக்கிளில் பயணிப்போர், பார்வை சவால் உடைய மாற்றுத்திறனாளிகள் போன்றவர்கள் விபத்துக்குள்ளாகி காயமடைய வாய்ப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு விபத்துகளை தடுக்கும் வகையில், மின்சார வாகனங்கள் மணிக்கு 20 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் பயணிக்கும் போது ஒலி எழுப்பும் வகையில் தயாரிக்கப்பட வேண்டும் என்ற புதிய விதிமுறை விரைவில் அமல்படுத்தவுள்ளது.