“நான்தான் உண்மையான சவுக்கிதார்” - மோடிக்கு எதிராக களமிறங்கும் முன்னாள் பாதுகாப்பு படை வீரர்

“நான்தான் உண்மையான சவுக்கிதார்” - மோடிக்கு எதிராக களமிறங்கும் முன்னாள் பாதுகாப்பு படை வீரர்

“நான்தான் உண்மையான சவுக்கிதார்” - மோடிக்கு எதிராக களமிறங்கும் முன்னாள் பாதுகாப்பு படை வீரர்
Published on

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சமாஜ்வாதிகட்சி சார்பில் முன்னாள் எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் போட்டியிடுகிறார்.

உத்தரபிரதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறகிறது. அந்த வகையில் வாரணாசி தொகுதியில் வரும் மே 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தொகுதியில் மறுபடியும் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவையும் மோடி பிரமாண்ட பேரணியுடன் சென்று தாக்கல் செய்தார். 

பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த முறை இத்தொகுதியில் போட்டியிட்ட அஜித் ராய் களமிறங்குகிறார். காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி மோடியை எதிர்த்து போட்டியிடுவார் எனத் தகவல்கள் வெளியாகின. இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சி அவரை வேட்பாளராக அறிவிக்கவில்லை. 

இந்நிலையில் வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரை சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது. அதாவது தேஜ் பகதூர் யாதவ் என்பவரை வேட்பாளராக களமிறக்கியுள்ளது. இவர் கடந்த முன்னாள் பாதுகாப்பு படை வீரர் ஆவார். கடந்த 2017 ஆம் ஆண்டு படை வீரர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தமைக்காக பணி நீக்கம் செய்யப்பட்டார். 

இதுகுறித்து தேஜ் பகதூர் யாதவ் கூறுகையில், “ நான் தான் உண்மையான சவுக்கிதார். நான் 21 ஆண்டுகளாக தேச எல்லைகளை பாதுகாத்து, ஊழலுக்கு எதிராக குரல் எழுப்பி வந்தேன். சவுக்கிதார் என்ற பெயர் மோடிக்கு பொருத்தமாக இல்லை” எனத் தெரிவித்தார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com