அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம்.. தேர்தல் களத்தில் நடந்த ’சோதனை’ வேட்டை - ரூ.1000 கோடி சிக்கியதா?

மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மற்றும் பிற மாநிலங்களில் சில தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடைபெறும் நிலையில், இதுவரை ரூ.1000 கோடி மதிப்பிலான பணம், இலவசமாக வழங்கப்பட இருந்த பொருட்கள் முதலியவை பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மாதிரிப்படம்
மாதிரிப்படம்pt web
Published on

மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக நாளை தேர்தல் நடைபெற உள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கும் நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதைத்தாண்டி, பிற மாநிலங்களில் 48 சட்டசபைத் தொகுதிகளுக்கும், 2 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில், இந்த தேர்தல் பரப்புரை காலங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் மொத்தமாக ரூ.1000 கோடி மதிப்பில் பணம், மதுபானம், இலவசபொருட்களை இந்திய தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது. 2019 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் தற்போது பறிமுதல் செய்யப்பட்ட தொகை 7 மடங்கு அதிகம் என கூறப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் ரூ.103.61 கோடி மதிப்பில் பொருளும், பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. ஜார்கண்டில் ரூ.18.76 கோடி மதிப்பிலான பணமும் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில்தான், மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் மட்டும் 7 மடங்கு அதிகமாக ரூ.858 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும் பணம், இலவச பொருட்கள், போதைப்பொருட்கள், மதுபானம், தங்கம் வெள்ளி உள்ளிட்ட விலை உயர் உலோகங்கள் என மொத்தமாக ரூ.660.18 மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஜார்கண்டில் ரூ.198.12 கோடி மதிப்பிலும், இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் 14 தொகுதிகளில் ரூ.223.91 கோடி மதிப்பிலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக ரூ. 1082.2 கோடி மதிப்பில் பறிமுதல்கள் நடந்துள்ளன.

வரலாறு காணாத பறிமுதல்

தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக கூறுகையில், “மகாராஷ்டிரா மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பறிமுதல்கள் நடைபெற்றுள்ளன. பால்கர் மாவட்டத்தில் உள்ள வாடா காவல்நிலையப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான ஜீப்பில் இருந்து ரூ. 3.70 கோடி ரூபாய் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. ராய்காட்டில் ரூ.5.20 கோடி மதிப்பிலான வெள்ளிக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஜார்கண்ட் மாநிலத்திலும் வரலாறு காணாத அளவில் பறிமுதல்கள் செய்யப்பட்டுள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் உருளைக்கிழக்கு பெட்டிகளுக்குப் பின் மறைத்து வைக்கப்பட்டிருந்த 449 அட்டைப்பெட்டி மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன ” என தெரிவித்துள்ளது.

கஞ்சா செடிகளும் பறிமுதல்

மகாராஷ்டிராவில் புல்தானா மாவட்டத்தில் உள்ள ஜமோத் தொகுதியில் மட்டும் ரூ.4.51 கோடி மதிப்பிலான 4500 கிலோ கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஜார்கண்ட் மாநிலத்திலும் ஹசாரிபாக்கில் இருந்து 48.18 கிலோ மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜார்கண்டில் ரூ.2.26 கோடி மதிப்பில் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com