கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம் - நாளை நடக்கவிருந்த மாநிலங்களவைத் தேர்தல் ஒத்திவைப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம் - நாளை நடக்கவிருந்த மாநிலங்களவைத் தேர்தல் ஒத்திவைப்பு
கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம் - நாளை நடக்கவிருந்த மாநிலங்களவைத் தேர்தல் ஒத்திவைப்பு
Published on

கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாநிலங்களில்‌ நாளை‌ நடைபெறவிருந்த மாநிலங்களவைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

197 நாடுகளுக்கு பரவிய கொரோனாவால் உலகளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,21,413ஆக அதிகரித்துள்ளது. 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிலையில் 4ல் ஒரு பங்காக 1,08, 388 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக இருந்தது. இதற்கிடையே நேற்று நள்ளிரவு தமிழகத்தில் ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்தார். நேற்று மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பித்து உத்தரவிட்டார். நேற்று நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால் அத்தியாவசிய தேவையின்றி யாரும் வெளியே நடமாட முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது.

இதனிடையே மாநிலங்களவையில்‌ காலியாகவுள்ள 55 இட‌ங்களுக்கான‌ தேர்தல் கடந்த மாதம் அறிவிக்‌கப்பட்டது. இதில் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் 37 ‌இடங்களுக்கா‌ன உறுப்பி‌னர்கள் போட்டியின்றி தேர்வு செய்ய‌ப்பட்டனர்.

ஆந்திரா, குஜராத், ஜார்கண்ட் உள்ளிட்ட 7 மாநிலங்களில், மீதமுள்ள 18 இடங்களுக்கான தேர்தல் நாளை நடக்கவிருந்தன.‌ இந்த நிலையில் கொரோனா பரவாமல்‌ தடுக்க அரசு எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, இந்த தேர்தலை ஒத்திவைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு நிலவரத்தை‌ கருத்தில்கொண்டு புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com