தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை விளம்பரப்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் கட்சிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் குற்றப் பின்னணி உடைய வேட்பாளர்களின் தகவல்களை விளம்பரப்படுத்தும் வழி முறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, வேட்பாளராக அறிவிக்கப்பிட்ட பின்னர் 4வது நாளில் ஒருமுறை விளம்பரப்படுத்த வேண்டும். அத்துடன் 9வது நாளில் ஒருமுறை விளம்பரப்படுத்த வேண்டும். மொத்தம் 3 முறை விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப்பின்னணி தெரிந்தவர் என்று தெரிந்த பின்னரே, அவரை தேர்வு செய்யலமா ? வேண்டாமா ? என்று மக்கள் முடிவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.