ஒடிஸாவில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் திடீர் ஒத்திவைப்பு!

ஒடிஸாவில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் திடீர் ஒத்திவைப்பு!
ஒடிஸாவில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் திடீர் ஒத்திவைப்பு!
Published on

ஒடிஸா மாநிலம் பிப்லி சட்டசபை தொகுதிக்கு நடத்த திட்டமிடப்பட்டிருந்த இடைத்தேர்தலை மே மாதம் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது தேர்தல் ஆணையம். 

ஒடிஸா மாநிலம், புரி மாவட்டத்துக்கு உள்பட்ட பிப்லி சட்டசபைத் தொகுதியில் மே மாதம் 13-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அந்த நாளன்று ரமலான் பண்டிகை வருவதால், வேறொரு நாளில் தேர்தலை நடத்துமாறு இஸ்லாமிய அமைப்புகளிடமிருந்து கோரிக்கைகள் வந்தன. இதையடுத்து, அந்தத் தொகுதியில் மே மாதம் 16-ஆம் தேதி இடைத்தோ்தல் நடத்தப்படும் என்று மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி எஸ்.கே.லோஹானி அறிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை, மே மாதம் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

புதிய தேர்தல் விதிகளின்படி, அனைத்து நேரடி பரப்புரைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. காணொலி முறையில் மட்டுமே பரப்புரை மேற்கொள்ள முடியும். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com