வெளிநாடு வாழ் இந்தியர்களை வாக்களிக்க வைக்க முடியும் - இந்திய தலைமை தேர்தல் ஆணையம்

வெளிநாடு வாழ் இந்தியர்களை வாக்களிக்க வைக்க முடியும் - இந்திய தலைமை தேர்தல் ஆணையம்
வெளிநாடு வாழ் இந்தியர்களை வாக்களிக்க வைக்க முடியும் - இந்திய தலைமை தேர்தல் ஆணையம்
Published on

வெளிநாடு வாழ் இந்தியர்களை வாக்களிக்க வைக்க தயார் நிலையில் இருப்பதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் என்றால், ஊரில் இருப்பவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். அதுபோல தபால்வாக்கு என்பது அனைவருக்குமானது அல்ல. தொழில் ரீதியாகவோ, படிப்புக்காகவோ இந்தியர்கள் பலர் வெளிநாடுகளில் உள்ளனர். அப்படி, சுமார் ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். அவர்களின் ஓட்டுகள் எப்போதும் வீணாகவே போகின்றன. இந்நிலையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்திய தேர்தல்களில் வாக்களிக்க வகை செய்ய இயலுமா என மத்திய சட்டத்துறை அமைச்சகம் கேட்டிருந்த சந்தேகங்களுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

அதில், உரிய சட்ட விதிமுறைகள் கொண்டுவரப்பட்டால் வெளிநாடு வாழ் இந்தியர்களை இந்திய தேர்தல்களில் வாக்களிக்க வைப்பது சாத்தியம்தான் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மின்னணு முறையில் வெளிநாடு வாழ் இந்தியர்களை வாக்களிக்க முடியும் என தெரிவித்துள்ளது. உரிய நம்பகத்தன்மையுடன் இது சாத்தியமானால் வெளிநாடு வாழ் இந்தியர்களும் தங்களது ஜனநாயகக் கடைமை நிறைவேற்றுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com