"மோடியிடம் சரணடைந்துவிட்டது தேர்தல் ஆணையம்" - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

"மோடியிடம் சரணடைந்துவிட்டது தேர்தல் ஆணையம்" - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
"மோடியிடம் சரணடைந்துவிட்டது தேர்தல் ஆணையம்" - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
Published on

பிரதமர் நரேந்திர மோடி முன்பு தேர்தல் ஆணையம் சரணடைந்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளன. வரும் 23ம் தேதி நாடு முழுவதும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, தேர்தல் நிதி பத்திரங்கள், வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு, வாக்குப்பதிவு நாளை முடிவு செய்தது, நமோ டிவி, மோடியின் ராணுவம் என பல்வேறு விஷயங்களில் மோடிக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் செயல்பட்டது. தற்போது மோடியின் கேதர்நாத் பயணத்திலும் அவருக்கு சாதகமாக செயல்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். 

மோடி மற்றும் அவரது குழுவினர் முன்பு தேர்தல் ஆணையம் சரணடைந்துவிட்டதாகவும் ராகுல் விமர்சித்துள்ளார். மரியாதைக்கும், பயத்துக்கும் உரியதாக இருந்த தேர்தல் ஆணையம் இனிமேல் அப்படி இருக்கப்போவதில்லை எனவும் ராகுல் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக நடந்து கொண்டுள்ளதாக குற்றஞ்சாட்டி இருந்தார். மோடி தான் நினைத்ததை எல்லாம் பரப்புரையில் பேசினார் என்றும் ஆனால் தாங்கள் அவ்வாறு பேசாத வகையில் தடுக்கப்பட்டதாகவும் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com