15 நாட்கள் ஐசியுவில் கொரோனாவுக்கு சிகிச்சை.. மீண்ட விவசாயி டாக்டருக்கு கொடுத்த அன்பு பரிசு

15 நாட்கள் ஐசியுவில் கொரோனாவுக்கு சிகிச்சை.. மீண்ட விவசாயி டாக்டருக்கு கொடுத்த அன்பு பரிசு

15 நாட்கள் ஐசியுவில் கொரோனாவுக்கு சிகிச்சை.. மீண்ட விவசாயி டாக்டருக்கு கொடுத்த அன்பு பரிசு
Published on

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்ட முதியவர் ஒருவர், தனக்குச் சிகிச்சை அளித்த மருத்துவருக்கு சொந்த விவசாய நிலத்தில் விளைந்த அரிசியை பரிசாகக் கொடுத்து பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இதுதொடர்பான பதிவை டாக்டர் ஊர்வி சுக்லா என்பவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

தனக்குச் சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றிய மருத்துவருக்கு எளிமையான ஆனால் விலைமதிப்புமிக்க பொருளைக் கொடுத்த முதியவர் சமூக வலைதளத்தில் பிரபலமாகப் பேசப்படுகிறார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்துவருகின்றன.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவசாயிக்கு 12 நாட்கள் செயற்கை சுவாசக்கருவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆபத்தான நிலையில் உயிர்பிழைத்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மருத்துவர்களுக்கு அரிசியை பரிசாகக் கொடுத்துள்ளார். இதைப் பற்றி டாக்டர் ஊர்வி சுக்லா எழுத அது பலரது நெஞ்சத்தைத் தொட்டுவிட்டது.

சமூக வலைதளத்தில் வைரலாக மாறிய இந்தப் பதிவுக்கு 3,300 லைக்குகள் கிடைத்துள்ளன. "இது சாதாரண அரிசி அல்ல. அவருடைய இதயத்தில் இருந்து வந்த ஆசிர்வாதங்கள்" என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com