சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 குறித்து இதுவரை 20 லட்சம் கருத்துகள் வந்துள்ளதால் அதனை ஆராய மத்திய அரசு குழு அமைத்துள்ளது.
மார்ச் மாதத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வரைவு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதுகுறித்து ஆகஸ்ட் 11 வரை பொதுமக்கள் தங்கள் கருத்துகளை வழங்கலாம் என குறிப்பிட்டிருந்தது. இதனிடையே சுற்றுச்சூழலை மாசுபடுத்த அரசாங்கம் ‘இலவச உரிமம்’ வழங்குவதாக பலரும் விமர்சித்து வருகின்றனர். நேற்றடன் வரைவு அறிக்கை குறித்து 20 லட்சம் கமெண்ட்டுகள் வந்துள்ளது.
இதனையடுத்து சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவின் இறுதி வடிவம் 724 நாள்களில் முடிக்கப்பட்டு, அதற்கான இறுதி வடிவம் கொடுக்கப்பட வேண்டும். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 வெளியிடப்பட்ட நாளில் இருந்து இப்போது வரை 20 லட்சம் கருத்துகள் வந்துள்ளதால். இதனை ஆராய்வதற்கு தேசிய சுற்றுச் சூழல் ஆராய்ச்சி மையம் ஈடுபட இருக்கிறது.
இதற்கு அம்மயத்தின் முன்னாள் இயக்குர் எஸ்.ஆர்.வாடே தலைமையில் குழு செயல்பட இருக்கிறது. இதுவரை வந்துள்ள சாதகபாதக அம்சங்களை இக்குழு ஆராய்ந்து சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில் தொடங்கியதற்குப் பிறகு சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற வழிவகுப்பது, 1994, 2006 அறிவிக்கைகளின்படி பொதுமக்கள் கருத்துகேட்பானது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்கு முன்பாக நடத்தப்பட வேண்டும்.
ஆனால், தற்போதுள்ள அறிவிக்கையின்படி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்குப் பிறகு கருத்துக் கேட்பு நடத்தலாம், அதற்கான நாட்களும் 30 லிருந்து 20 ஆக குறைக்கப்பட்டுள்ளது, விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் முறையீடு செய்வது அனுமதிக்கப்படவில்லை, மாறாக, விதிகளை மீறிய திட்டப்பணியாளர்கள், அரசு அதிகாரிகள், மதிப்பீட்டுக் குழு ஆகியோரிடம் இருந்து அரசே கேட்டறியும் என்பன போன்ற பல்வேறு அம்சங்களுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.