பீகார் மாநில கல்வித்துறை அமைச்சர் மேவாலால் சவுத்ரி பதவியேற்ற மூன்றே நாளில் ராஜினாமா செய்துள்ளது அரசியல் வட்டாரத்தை அதிர்ச்சியூட்டியுள்ளது.
மூன்றுக் கட்டங்களாக நடந்த பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி 125 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. நான்காவது முறையாக முதல்வர் ஆனார் நிதிஷ்குமார்.. அவரது அமைச்சரவையில் கல்வித்துறை அமைச்சராக, அதேக்கட்சியை சேர்ந்த மேவாலால் சவுத்ரி கல்வித்துறை அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.
இவர் மீது ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்தது. அதோடு, தேசிய கீதத்தையும் சரியாகப் பாடவில்லை என்று வைரல் வீடியோவும் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இன்று மேவாலால் சவுத்ரி ராஜினாமா செய்துள்ளது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.