கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புக்காக டெல்லி எய்ம்ஸில் மத்திய கல்வி அமைச்சர் அனுமதி

கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புக்காக டெல்லி எய்ம்ஸில் மத்திய கல்வி அமைச்சர் அனுமதி
கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புக்காக டெல்லி எய்ம்ஸில் மத்திய கல்வி அமைச்சர் அனுமதி
Published on

மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா இரண்டாவது அலையில், பாதிப்பைவிடவும் அதற்கு பிந்தைய பாதிப்புகள் அதிகமாக பதிவாகிவருகிறது. இது நாடு முழுவதும் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அரசியல் பிரமுகர்களும் அதற்கு விதிவிலக்கல்ல.

அந்தவகையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரானாவால் பாதிக்கப்பட்டு மீண்டிருந்தார். அவருக்கு கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதற்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்போது அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் இதே மருத்துவமனையில் கொரோனாவுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த இவர், அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, வீடு திரும்பி பணிகளை தொடர்ந்து வந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் அனுமதிக்கப்பட்டு, தனி வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொது தேர்வு பற்றிய முக்கிய அறிவுப்புகள் ஓரிரு நாட்களில் வெளியாகும் என சொல்லப்பட்டிருந்த நிலையில், அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com