அந்நிய முதலீட்டு சட்டம் மீறல்: அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு சம்மன்

அந்நிய நேரடி முதலீட்டு சட்டத்தை மீறிய விவகாரம் தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராக அமேசான், பிளிப்கார்ட் ஆகிய இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
அமேசான்
அமேசான்புதியதலைமுறை
Published on

அந்நிய நேரடி முதலீட்டு சட்டத்தை மீறிய விவகாரம் தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராக அமேசான், பிளிப்கார்ட் ஆகிய இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி
உள்ளது.

ஃபிளிப்கார்ட், அமேசான் ஆகிய இ- காமர்ஸ் நிறுவனங்கள் இந்திய இ- காமர்ஸ் சந்தையில் முக்கிய நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன. இத்தகைய வெளிநாட்டு இ- காமர்ஸ் நிறுவனங்கள், தங்களது சொந்த உற்பத்திப் பொருட்களை
இணையதளங்கள் மூலம் விற்பனை செய்ய இந்தியாவில் தடை உள்ளது.

அமேசான்
அமேசான்எக்ஸ் தளம்

ஆனால் வால்மார்ட், அமேசான் நிறுவனங்கள் இந்த தடையை மீறி
தங்களது சொந்த உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதாக
புகார் எழுந்துள்ளது. இத்தகைய புகார்கள் தொடர்பாக அத்தகைய நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை கடந்த வாரம் சோதனை நடத்தியது. அப்போது
கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து வருவதாக மூத்த அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான்
மதுரை: தவெகவை ஒடுக்கும் காவல்துறை? ‘விலையில்லா விருந்தகம்’ திடீர் அகற்றத்தால் வெடித்த சர்ச்சை!

இந்நிலையில் அமேசான், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்களின் செயல் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. அந்நிய நேரடி முதலீட்டுச் சட்டத்தை மீறி இருப்பது
கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்ததில்
உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்தும் நோக்கில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகக்
கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com