நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்த நடப்பாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையின் சில முக்கிய அம்சங்கள்:
1) 2018-19ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 முதல் 7.5 சதவீதமாக இருக்கும்.
2) கச்சா எண்ணெய் விலை வரும் நிதியாண்டில் 12 சதவீத வளர்ச்சி காட்டும் என கணிப்பு.
3) வேலைவாய்ப்பு, கல்வி, விவசாயம் போன்றவை கூடுதல் கவனத்தைப் பெறும் துறைகளாக இருக்கும்.
4) கடந்த 6 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, கடந்த ஆண்டில்தான் மிகக் குறைந்த அளவு பணவீக்கம் இருந்துள்ளது.
5) எளிதான வணிக நடைமுறை அமலாக்கத்தில் உலக அளவிலான சர்வே முடிவுகளில் 172வது இடத்தில் இருந்து 164க்கு முன்னேற்றம்.
6) வடகிழக்கு மாநிலங்கள் மற்ற பகுதிகளை விட தொடர்ந்து சிறப்பான வளர்ச்சி கண்டு வருவதாக தெரிகிறது.
7) கடந்த ஆண்டு நவம்பர் நிலவரப்படி, 3,30,860 மெகாவாட் மின்உற்பத்தித் திறன் என்ற இலக்கு எட்டப்பட்டுள்ளது.
8) விமானப் போக்குவரத்து துறையிலும் நல்ல முன்னேற்றம்; பயணிகளின் எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டை விட 16% வளர்ச்சி கண்டுள்ளது.
9) விவசாயிகளுக்கு கடன் வழங்க கடந்த ஆண்டில் 20,339 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
10) வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாய்நாட்டுக்கு அனுப்பும் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
11) கடந்த ஆண்டைவிட, நடப்பாண்டில் இந்திய ரயில்வே மூலம் 2,5 கோடி டன் சரக்கு கூடுதலாக எடுத்துச் செல்லப்பட்டது.
12) இந்திய பங்குசந்தைகளில் செய்யப்படும் அன்னிய நேரடி முதலீட்டின் அளவு அதற்கு முந்தைய ஆண்டை விட இவ்வாண்டு 8% வரை அதிகரித்துள்ளது.
13) இந்திய நகரங்களில் வாழும் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருவதால், 2031ம் ஆண்டு வாக்கில் இது 60 கோடி என்ற இலக்கை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
14) இந்திய வேளாண் பொருட்களின் தேவையை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, பயறு வகை, தானிய ரகம், எண்ணெய் வித்துகள் போன்றவற்றில் 209 புதிய பயிர் ரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
15) 2010-11 ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, கடந்த 7 ஆண்டுகளில் விவசாயத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக கூடுதலாக 1500 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
16) விவசாயத்திற்கு ஒதுக்கப்படும் தொகையில் 30% பெண்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என முடிவு விவசாயிகளின் உற்பத்திக்கு கட்டுபடியாகும் விலை கிடைக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்தப் பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
17) இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் மகராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத்,கர்நாடகா, தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்கள் சுமார் 70 % நிறைவு செய்கின்றன.
18) மறைமுகமாக வரி செலுத்துவோர் எண்ணிக்கை 50% உயர்வு.
19) பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிக்க, நீதித்துறையோடு ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டிய அவசியம் உள்ளது.
20) உள்நாட்டு சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.