டிவியில் பேட்டி கொடுத்ததற்காக ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

டிவியில் பேட்டி கொடுத்ததற்காக ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
டிவியில் பேட்டி கொடுத்ததற்காக ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
Published on

குஜராத்தில் இன்று 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தது தொடர்பாக விளக்கம் கேட்டு அவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

குஜராத் தேர்தலில் 2 ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கான பரப்புரை நேற்று முன்தினம் நிறைவடைந்தது. வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கு முன்னதாக 48 மணி நேரம் பரப்புரை செய்யும் விதமாக பேசவோ, தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுக்கவோ கூடாது. அப்படி செய்தால் அது தேர்தல் ஆணைய விதிகளின் படியும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படியும் குற்றமாகும். நேற்று காங்கிரஸ் தலைவர் குஜராத் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அவரது பேட்டி பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பட்டது.

ராகுல் காந்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தது தொடர்பாக அவரிடம் இருந்து விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரும் 18 ஆம் தேதிக்குள் ராகுல் விளக்கமளிக்குமாறும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ராகுல் காந்தியின் பேட்டியை ஒளிபரப்பிய தொலைகாட்சிகள் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 126(1)(பி) பிரிவின் கீழ் காவல் நிலையத்தில் வழக்கு தொடருமாறு குஜராத் தேர்தல் ஆணையத்திற்கு, தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com