போலிச் சான்றிதழ் கொடுத்தாரா டெல்லி பல்கலை மாணவர் சங்கத் தலைவர் ?

போலிச் சான்றிதழ் கொடுத்தாரா டெல்லி பல்கலை மாணவர் சங்கத் தலைவர் ?

போலிச் சான்றிதழ் கொடுத்தாரா டெல்லி பல்கலை மாணவர் சங்கத் தலைவர் ?
Published on

டெல்லி பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தேர்தலில் தலைவராக வென்ற ஏபிவிபி அமைப்பு மாணவர் போலிச் சான்றிதழ் வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

டெல்லி பல்கலைக் கழகத்திற்கு நடைபெற்ற மாணவர் தேர்தலில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஏபிவிபி மாணவர் அமைப்பினர் தலைவர், துணைத் தலைவர், இணைச் செயலாளர் பதவிகளை வென்றனர். காங்கிரஸ் கட்சியின் தேசிய மாணவர் சங்கம் அமைப்பினர் செயலாளர் பதவிக்கும் மட்டும் வெற்றி பெற்றனர். இதையடுத்து வாக்கு இயந்திரங்களில் மோசடி செய்ததாக காங்கிரஸ் தரப்பினர் குற்றம்சாட்டினர். அத்துடன் மாணவர் சங்கத் தலைவராக வெற்றி பெற்ற அங்கிவ் பாய்சோயா போலிச் சான்றிதழ் கொடுத்து தனது முதுகலைப்படிப்பை, டெல்லி பல்கலைக்கழத்தில் தொடர்வதாக குற்றம்சாட்டினர்.

இதற்கு ஏபிவிபி மாணவர் அமைப்பு மறுப்பு தெரிவித்தது. அத்துடன் காங்கிரஸ் மாணவர்கள் வதந்தி பரப்புவதாக அங்கிவ் குற்றம்சாட்டினார். இந்நிலையில் காங்கிரஸ் மாணவர் அமைப்பின் கூட்டணி மாணவர் அமைப்பான தேசிய மாணவர் சங்கத்தினர், திருவள்ளூர் பல்கலைகழத்தின் சார்பில் வெளியிடப்பட்டதாக ஒரு சான்றிதழ் நகலை வெளியிட்டுள்ளனர். அதில் அங்கிவ் பாய்சோவா என்பவருக்கு வழங்கப்பட்ட சான்றிதழ் போலியானது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை சட்டப்பூர்வமாக சந்திக்கவுள்ளதாக அங்கிவ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் பல்கலைக்கழகம் வேலூரில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com