போலீசார் முன்பு ஆடையை களைந்து ரகளையில் ஈடுபட்ட மாடலால் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை அந்தேரி லோகண்ட்வாலா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், 15 மாடியில் உள்ள ஒரு வீட்டில், பேயிங் கெஸ்டாக வசிக்கிறார் சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மாடலிங் செய்து வந்த இவர், ஸ்கிரிப்ட் டைரட்டராகவும் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 25- ஆம் தேதி நள்ளிரவு தனது பிளாட்டில் மது அருந்திய சுதா, செக்யூரிட்டி அலோக் என்பவரை இண்டர்காமில் அழைத்து சிகரெட் பாக்கெட் வாங்கிவரும்படி கூறியுள்ளார்.
இந்த நேரத்துக்குப் போய் வாங்கிவர முடியாது என்று கூறியுள்ளார் அலோக். இதனால் அவரை போனில் திட்டிய சுதா, பின்னர் வீட்டில் இருந்து கீழே வந்தார். செக்யூரிட்டியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கடுமையாகத் திட்டினார். பின்னர் அவரை சரமாரியாகத் தாக்கத் தொடங்கினார். பின்னர் அவரே போலீசுக்கு போன் செய்து தன்னை செக்யூரிட்டி தாக்கியதாகக் கூறினார். போலீசார் வந்தனர். மாடல் தன்னை தாக்கிய சிசிடிவி காட்சிகளை செக்யூரிட்டி அவர்களிடம் காண்பித்தார்.
பின்னர் போலீசார் சுதாவை ஸ்டேஷனுக்கு வந்து புகார் தரும்படி அழைத்தனர். முடியாது என்று கூறிய மாடல், ’பெண் போலீஸ் இல்லை, உங்களுடன் வரமுடியாது’ என்று தெரிவித்துள்ளார். இதனால் அவர்களுக்கு பிரச்னை ஏற்பட்டது.
பின்னர் தனது வீட்டுக்குச் செல்வதற்காக லிப்ட் அருகே சென்றார். போலீசார் வீட்டுக்குச் செல்ல அவரை அனுமதிக்கவில்லை.இதையடுத்து அவர்கள் முன், தனது உடைகளை ஒவ்வொன்றாக கழற்றி ரகளையில் ஈடுபட்டார். இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் ஒரு வழியாக போலீசார் மாடலை சமாதானப்படுத்தினர். அவர் காலையில் போலீஸ் ஸ்டேஷன் வந்து புகார் கொடுத்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.