இந்தக் காட்சியைக் கண்டவர்கள் கூச்சலிட்டுக் கத்தியுள்ளனர். மேலும் அந்த நபர் பாம்பைப் பிடித்து, அதைத் துண்டு துண்டுகளாகப் பற்களால் கடித்ததை கண்டித்துள்ளனர். ஆனால் அவர் அதனைப் பொருட்படுத்தவில்லை.
இந்நிலையில் அந்த இளைஞர் குமார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். உள்துறை அமைச்சக உத்தரவைத் தொடர்ந்து திங்களன்று மது விற்பனை மீண்டும் தொடங்கிய பின்னர் நாடு முழுவதும் இதைப்போல பல அசம்பாவித சம்பவங்கள் பதிவாகியுள்ளன. விதிமுறைகளை மீறி மது பானம் வாங்குவதற்காகப் பலரும் அடிதடியில் இறங்கியுள்ளனர். அதுபோன்ற புகைப்படங்கள் பல சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. கர்நாடகாவிலுள்ள பெங்களூரில் ஒரு நபர் 52,000 ரூபாய் மதிப்புள்ள மதுபானத்தை வாங்கினார். அதற்காக ரசீது சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.