யஷ்வந்த் சின்கா Vs திரவுபதி முர்மு: இன்று தொடங்குகிறது குடியரசு தலைவருக்கான தேர்தல்!

யஷ்வந்த் சின்கா Vs திரவுபதி முர்மு: இன்று தொடங்குகிறது குடியரசு தலைவருக்கான தேர்தல்!
யஷ்வந்த் சின்கா Vs திரவுபதி முர்மு: இன்று தொடங்குகிறது குடியரசு தலைவருக்கான தேர்தல்!
Published on

குடியரசுத் தலைவர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் 16வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24ஆம் தேதியுடன் நிறைவடைவதால், அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் ஜார்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர்.

வாக்குப்பதிவுக்காக டெல்லியில் உள்ள நாடாளுமன்றம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டமன்றங்களிலும் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களித்து குடியரசுத் தலைவரை தேர்வு செய்ய உள்ளனர். எம்.பி.க்களின் வாக்குமதிப்பு தலா 708 ஆக உள்ளது. எம்எல்ஏக்களின் வாக்கு மதிப்பு அந்தந்த மாநிலங்களின் மக்கள் தொகையை பொறுத்து மாறுபடுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள எம்எல்ஏ-க்களின் வாக்கு மதிப்பு 176ஆக உள்ளது. இந்த தேர்தலில் மொத்த வாக்குகளின் மதிப்பு 10 லட்சத்து 86 ஆயிரத்து 431 ஆக உள்ளது. இதில் அதிக வாக்கு மதிப்பு பெறுவோர் குடியரசுத் தலைவராக அறிவிக்கப்படுவர். வாக்கு எண்ணிக்கை வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com