ஆயுதங்களைக் கொண்டு வந்த ட்ரோன்: சுட்டு வீழ்த்திய இந்திய பாதுகாப்புப் படை

ஆயுதங்களைக் கொண்டு வந்த ட்ரோன்: சுட்டு வீழ்த்திய இந்திய பாதுகாப்புப் படை
ஆயுதங்களைக் கொண்டு வந்த ட்ரோன்: சுட்டு வீழ்த்திய இந்திய பாதுகாப்புப் படை
Published on

ஜம்மு-காஷ்மீரில் கத்துவா அருகே ஆயுதங்களை ஏந்திய ட்ரோன் ஒன்று எல்லை பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், அதிலிருந்து அமெரிக்காவைச் சார்ந்த M4 ரகத் துப்பாக்கியும், இரண்டு இதழ்களும், வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன. இது, ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களை வழங்குவதற்காகப் பாகிஸ்தான் படைகள் மேற்கொண்ட மற்றொரு முயற்சி என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியது " 8 அடி அகலம் கொண்ட இந்த ட்ரோன் கத்துவா பகுதியில் உள்ள எல்லை பாதுகாப்புப் படைக்கு அருகே பாகிஸ்தானின் பனேசர் பகுதியிலிருந்து கட்டுப்படுத்தப்பட்டது. இன்று அதிகாலை 5.10 மணியளவில் எல்லை பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, ட்ரோன் வானத்தில் சுற்றிக் கொண்டிருந்தது அவர்கள் கண்ணில் பட்டுள்ளது. இந்திய எல்லைக்குள் 250 மீட்டர் தூரம் பறந்து கொண்டிருந்த அந்த ட்ரோன் மீது பாதுகாப்புப் படை வீரர்கள் ஒன்பது சுற்றுகள் துப்பாக்கிச்சூடு நடத்தி வீழ்த்தினர்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் " பாகிஸ்தான் ஏஜென்சிகளின் இந்தச் செயல்கள் காஷ்மீரில் தீவிரமாகச் செயல்படும் ஜெய்ஷ்-இ- பயங்கரவாதிகளைப் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்துவதற்கும், அமைதி மற்றும் ஒழுங்கை சீர்குலைப்பதற்கும் ஆயுதம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. பாகிஸ்தானின் எல்லையிலுள்ள மற்ற பகுதிகளிலும், குறிப்பாக குப்வாரா, ராஜோரி மற்றும் ஜம்மு பகுதிகளிலும் இதேபோன்று ஆயுதங்களைக் கடத்தும் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன" என்று அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com