தரையில் இருந்து வான் இலக்குகளை தாக்கவல்ல ஆகாஷ்-என்ஜி ஏவுகணை சோதனை வெற்றி

தரையில் இருந்து வான் இலக்குகளை தாக்கவல்ல ஆகாஷ்-என்ஜி ஏவுகணை சோதனை வெற்றி
தரையில் இருந்து வான் இலக்குகளை தாக்கவல்ல ஆகாஷ்-என்ஜி ஏவுகணை சோதனை வெற்றி
Published on

தரையில் இருந்து வான் இலக்குகளை தாக்கக்கூடிய நியூ ஜெனரேஷன் ஆகாஷ்-என்ஜி ஏவுகணையை ஒடிசா கடற்கரைக்கு அருகில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) புதன்கிழமை வெற்றிகரமாக சோதனை செய்தது.

பன்நோக்கு ரேடார், உத்தரவு, கட்டுப்பாடு மற்றும் தகவல் தொடர்பு அமைப்பு உள்ளிட்ட ஆயுத அமைப்புரீதியான அனைத்து உபகரணங்களுடன் தரைதளத்தில் இருந்து பிற்பகல் 12.45 மணியளவில் சோதனை நடத்தப்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆயவகம், டிஆர்டிஓ-வின் இதர ஆய்வகங்களோடு இணைந்து இந்த ஏவுகணையை தயாரித்துள்ளது. இந்திய விமானப்படையின் பிரதிநிதிகள் இன்றைய சோதனையை நேரில் கண்டனர்.

சோதனை தரவுகளை சேகரிப்பதற்காக பல்வேறு முறைகள் கையாளப்பட்டன. ஏவுகணையின் சிறப்பான செயல்பாடு அனைத்திலும் பதிவு செய்யப்பட்டு, உறுதி செய்யப்பட்டது. வான் ரீதியான அச்சுறுத்தல்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் திறனை ஏவுகணை வெளிப்படுத்தியது.

இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டவுடன், அதன் வலிமையை அதிகரிக்கும் விதத்தில் ஆகாஷ்-என்ஜி-யின் செயல்பாடுகள் இருக்கும். பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மற்றும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் போன்ற உற்பத்தி முகமைகளும் சோதனையில் பங்கேற்றன.

டிஆர்டிஓ, பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மற்றும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட், இந்திய விமானப்படை மற்றும் தொழில்துறையை வெற்றிகரமான சோதனைக்காக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டினார். குழுவின் முயற்சிகளை பாராட்டிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை செயலாளர் மற்றும் டிஆர்டிஓ தலைவர், இந்திய விமானப்படைக்கு இந்த ஏவுகணை வலுவூட்டும் என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com