டிராகன் பழத்தின் பெயர் கமலம் என மாற்றப்பட்டுள்ளதாக குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஜய் ருபானி "டிராகன் பழத்திற்கு மறுபெயரிட முடிவு செய்தோம். டிராகன் பழத்தின் வெளிப்புற தோற்றம் தாமரை போன்று காட்சியளிப்பதால், டிராகன் பழத்தை கமலம் என பெயர்மாற்றம் செய்துள்ளோம். சீனாவுடன் தொடர்புடைய டிராகன் பழத்தின் பெயரை, கமலம் என மாற்றியுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.
டிராகன் பழம் ரத்த சர்க்கரையின் அளவு அபாயகட்ட நிலையை அடையாமல் தடுக்க உதவுக் கூடியது எனச் சொல்லப்படுகிறது. இப்பழம் இரத்த சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்தி, நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது என்பது இதன் சிறப்பம்சம்.