இஸ்லாமிய சமுதாயத்தினர் முத்தலாக் விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது என்று, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
முத்தலாக் எனும் தீங்கிலிருந்து பெண்களை பாதுகாக்க இஸ்லாமிய சமுதாய மக்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். முத்தலாக் கூறி விவகாரத்து செய்யும் முறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த அறிஞர்கள் முன்வருவார்கள் என நம்புவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
டெல்லியில் கன்னட கவிஞர் மற்றும் சீர்திருத்தவாதி பசவேஸ்வர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் முத்தலாக் முறைக்கு எதிராக, நவீனத்திற்கான பாதையை காட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். காலாவதியான நடைமுறைகளை ஒழித்து, புதிய நடைமுறையை இஸ்லாமிய சமூகத்தினர் தொடங்க வேண்டும் என்றும், முத்தலாக் விவகாரத்தை அரசியலாக்க கூடாது என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.