எகிப்தைச் சேர்ந்த பிரபல அழகி கிளியோபாட்ரா தன்னுடைய இளமை மற்றும் அழகைப் பாதுகாக்க கழுதைப்பாலில் குளித்தார் என்று பலரும் கேள்விப்பட்டிருக்கிறோம். கழுதைப்பாலில் அவ்வளவு மகத்துவம் நிறைந்திருக்கிறதா என கேள்வி எழும்.
குஜராத்தில் உள்நாட்டு இனமான ஹலாரி இனக் கழுதையின் பால் அதிக மதிப்பைப் பெற்றுள்ளது. முதன்முதலில் கழுதைப்பால் பண்ணை ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹிசார் மாவட்டத்தில் தொடங்கப்பட உள்ளது. உண்மையிலேயெ திரவத் தங்கம் என அழைக்கப்படுகிறது இந்தக் கழுதைப்பால். காரணம் இந்தவகை இனக் கழுதையின் ஒரு லிட்டர் பால் ரூ.7 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. உலகிலேயே விலையுயர்ந்த பால் இது. தேசிய குதிரைகள் ஆராய்ச்சி மையம் இந்த பண்ணையை தொடங்கவுள்ளது. அதற்காக 10 ஹலாரிக் கழுதைகளை வாங்கியுள்ளது.
இந்தக் கழுதைப்பாலில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. ஆன்டி ஆக்ஸிடண்டுகள் அதிகமுள்ளது மற்றும் இளைமையாக வைத்திருக்கும். மேலும் குழந்தைகளுக்கு எந்தவித ஒவ்வாமையையும் ஏற்படுத்தாது. ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ. 7 ஆயிரம்வரை விற்கப்படுகிறது. கழுதைப்பாலில் செய்யப்படும் அழகுச்சாதனப் பொருட்களின் விலை கூட மிக அதிகம்.