"மதவெறியால் மாணவர்களை துண்டாட வேண்டாம்" என்று மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு. வெங்கடேசன் பேசினார்.
ஹிஜாப் விவகாரத்தை முன்வைத்து கர்நாடகா கல்லூரிகளில் நடைபெற்று வரும் போராட்டங்கள் நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக பல அரசியல் கட்சிகள் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், ஹிஜாப் பிரச்னை தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு. வெங்கடேசன் மக்களவையில் இன்று உரையாற்றினார்.
அவர் பேசுகையில், "ஹிஜாப் அணிவதை முன்வைத்து நடைபெறும் வெறுப்பரசியல் மாணவ சமூகத்தினரை கூறுபோட்டுக் கொண்டிருக்கிறது. அரசின் உத்தரவுபடி தான் கல்லூரி மாணவர்கள் ஆடை அணிய வேண்டுமா? லாவண்யா மரணத்தில் மதமாற்ற மர்மம் இருக்கிறதா என்று துப்பு துலக்க ஓடிய குழந்தைகள் ஆணையம், கர்நாடகத்துக்கு ஏன் செல்ல மறுக்கிறது?” என அவர் கேள்வியெழுப்பினார்.