திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப் அரசாங்க அதிகாரிகளை நீதிமன்ற அவமதிப்பு பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும், காவல்துறை தனது கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேவ், சிவில் சர்வீஸ் அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் நீதிமன்ற அவமதிப்பு பற்றி கவலைப்படாமல் அனைவரும் வேலை செய்ய வேண்டும் என்று கூறியது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. திரிபுரா சிவில் சர்வீஸ் அதிகாரிகள் சங்கத்தின் 26 வது மாநாட்டில் பேசிய பிப்லாப் குமார் தேப் "இது மக்கள் அரசாங்கம், நீதிமன்ற அரசாங்கம் அல்ல. நீதிமன்றம் மக்களுக்காகவே உள்ளது. மக்கள் நீதிமன்றத்துக்காக இல்லை. ஒரு குறிப்பிட்ட பணியை அவர்களால் செய்ய முடியாது என்று பல அதிகாரிகள் என்னிடம் கூறியுள்ளனர். ஏனெனில் அவ்வாறு செய்வது நீதிமன்ற அவமதிப்பை ஏற்படுத்தும். ஏன் நீங்கள் பயப்பட வேண்டும்? நீதிமன்றம் தீர்ப்பை வழங்கும். ஆனால் போலீசார் அதை செயல்படுத்துவார்கள். போலீசார் என் கட்டுப்பாட்டில் உள்ளனர். அதற்கு நான் சாட்சி ”என்று கூறினார்.
மேலும், “நீதிமன்றத்தை அவமதிப்பது புலி போன்றது என அவர்கள் அஞ்சினார்கள். நான் ஒரு புலி, அரசாங்கத்தை நடத்தும் நபர். கட்சி அதிகாரத்தில் உள்ள முக்கிய நபர் மற்றும் மொத்த அதிகாரமும் கொண்டவர்" என முதல்வர் டெப் கூறினார்.
இந்த கருத்துகளுக்கு பதிலளித்த திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, “திரிபுரா பாஜக முதல்வர் நீதித்துறை மற்றும் ஜனநாயகத்தை கேலி செய்துள்ளார். இது ஒட்டுமொத்த தேசத்திற்கும் ஒரு அவமதிப்பு” எனத் தெரிவித்தார்