'இளைஞர்களே ஃபேஸ்புக் காதலில் விழாதீர்கள்' அனுபவபட்டவரின் அறிவுரை

'இளைஞர்களே ஃபேஸ்புக் காதலில் விழாதீர்கள்' அனுபவபட்டவரின் அறிவுரை
'இளைஞர்களே ஃபேஸ்புக் காதலில் விழாதீர்கள்' அனுபவபட்டவரின் அறிவுரை
Published on

பேஸ்புக் காதலில் விழாதீர்கள் என்று பாகிஸ்தான் சிறையில் இருந்து திரும்பிய ஹமிது நேஹல் அன்சாரி அறிவுரை வழங்கியுள்ளார்

மும்பையைச் சேர்ந்தவர் ஹமிது நேஹல் அன்சாரிக்கு பேஸ்புக்கில் இவருக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் தோழியாக அறிமுகமானார். அங்குள்ள கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள கரக் நகரைச் சேர்ந்த அந்தப் பெண்ணும் அன்சாரியும் தினமும் சாட் செய்துள்ளனர். பின்னர் இந்த நட்பு காதலாக மாறியது.

பின்னர், அன்சாரியுடனான நட்பை துண்டித்தார் அந்தப் பெண். இதனால் சோகமான அன்சாரி, அந்தத் தோழியை சந்திக்க முடிவு செய்து, ஆப்கானிஸ்தான் வழியாக 2012 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சென்றார். அங்கு கரக் நகர் ஓட்டல் ஒன்றில் 2 நாள் தங்கிய அவரை உளவு பிரிவு போலீசார், 2012-ம் ஆண்டில் கைது செய்தனர். மொத்தம் 6 ஆண்டுகள் சிறையில் இருந்த அவர் பாகிஸ்தான் சிறையில் இருந்து சமீபத்தில்  விடுவிக்கப்பட்டார். 

இந்நிலையில் இளைஞர்களுக்கு  ஹமிது நேஹல் அன்சாரி பல அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதில் பேஸ்புக் மாதிரியான சமூக வலைதளங்களில் காதலில் விழாதீர்கள். பெற்றோர்களிடன் எதையும் மறைக்காதீர்கள். ஒரு நாட்டுக்குள் செல்ல விரும்பினால் சட்டரீதியிலான வழிமுறைகளை பின்பற்றுங்கள். நான் பாகிஸ்தானில் இருந்து திரும்புவேன் என்று எதிர்பார்க்கவில்லை. மக்கள் எனக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்திய அரச்ம், சுஷ்மா சுவராஜும் எனக்கு உதவியுள்ளனர். என் கதையை படமாக்க வேண்டுமென்று நினைக்கிறேன். அதற்காக அமீர்கானை சந்திக்க திட்டமிட்டுள்ளேன். நான் நல்ல வேலையில் சேர்ந்த பிறகே திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்

ஹமிது நேஹலின் விடுதலை குறித்து பேசிய அவரது சகோதரர், கடந்த ஆறு வருடங்களாக எங்கள் வீட்டில் சிறு பொருளைக்கூட இடம்மாற்றவில்லை. எங்கள் குடும்பத்தினர் யாரும் எந்த பொது விஷேசங்களிலும் கலந்துகொள்ளவில்லை. என் சகோதரர் திரும்பி வந்ததை எங்களால் நம்பமுடியவில்லை. நாங்கள் நெகிழ்ச்சியான தருணத்தில் இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com