ஏழைகளுக்கு பிரதமர் மட்டும்தான் உதவ வேண்டுமா? - பிரியங்கா காந்தி கேள்வி

ஏழைகளுக்கு பிரதமர் மட்டும்தான் உதவ வேண்டுமா? - பிரியங்கா காந்தி கேள்வி
ஏழைகளுக்கு பிரதமர் மட்டும்தான் உதவ வேண்டுமா? - பிரியங்கா காந்தி கேள்வி
Published on

கொரோனா பரவலின்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீடு திரும்ப இலவச டிக்கெட்டுகளை காங்கிரஸ் கட்சி வழங்கியதால் கொரோனா பரவல் அதிகமானது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியதை அடுத்து, ஏழைகள் ஆதரவற்றவர்களாக இருக்க வேண்டும் என்று பிரதமர் விரும்புகிறாரா என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்

நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, “கோவிட் -19 முதல் அலையின் போது, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மும்பையை விட்டு வெளியேற காங்கிரஸ் கட்சி இலவச ரயில் டிக்கெட்டுகளை வழங்கியது. அதே நேரத்தில், டெல்லி அரசாங்கம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நகரத்தை விட்டு வெளியேறச் சொல்லி அவர்களுக்கு பேருந்துகளை வழங்கியது. இதன் விளைவாக, பஞ்சாப், உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் கோவிட் வேகமாக பரவியது" என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள பிரியங்கா காந்தி, “புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பிரதமர் மோடியால் கைவிடப்பட்டவர்கள். அவர்கள் வீடு திரும்ப வழியில்லை, எனவே அவர்கள் நடந்தே சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு யாரும் உதவி செய்யக்கூடாது என மோடி விரும்புகிறாரா? புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீடு திரும்பியதால் கொரோனா பரவியது என்று சொல்லும் பிரதமர், அவர் நடத்திய பிரமாண்ட தேர்தல் பேரணிகள் பற்றி என்ன சொல்கிறார்.

ஏப்ரல் 2021 இல், மேற்கு வங்காளத்தின் அசன்சோலில் நடந்த சட்டமன்ற தேர்தல் பேரணியில் பேசிய பிரதமர் மோடி, இந்த பெரும் கூட்டத்தைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறினார். அப்போது இந்தியாவில் தினசரி 2 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் பதிவாகிக்கொண்டிருந்தது" என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com