பிரசாந்த் கிஷோரின் புதிய கட்சி... பாஜக, நிதிஷுக்கு சிக்கலா? என்ன நடக்கிறது பீகார் அரசியலில்?

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக்கொடுத்து வந்த பிரசாந்த் கிஷோர், நேரடி அரசியல் கட்சியைத் தொடங்கவிருப்பது இந்திய அளவில் பேசுபொருளாகியுள்ளது.
பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்Twitter
Published on

தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் தன்னுடைய `ஜன் சூராஜ்’ அமைப்பை, வரும் அக்டோபர் இரண்டாம் தேதி, கட்சியாக மாற்றப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக்கொடுத்துவந்த அவர் நேரடி அரசியல் கட்சியைத் தொடங்கவிருப்பது இந்திய அளவில் பேசுபொருளாகியுள்ளது. அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் பீகார் தேர்தலை மனதில் வைத்தே, அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார். இந்தநிலையில்,

பிரசாந்த் கிஷோர் சாதிப்பாரா எனப் பார்ப்பதற்கு முன்பாக, அவர் கடந்து வந்த பாதை குறித்துப் பார்ப்போம்...

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்PT WEB

தேர்தலில் வெல்ல வியூகங்களை வகுப்பதற்கு நிறுவனங்கள் இருக்கின்றன, நிபுணர்கள் இருக்கிறார்கள் என்பதே இங்கே பலருக்கு, பிரசாந்த் கிஷோர் என்கிற பெயரைக் கேள்விப்பட்ட பிறகுதான் தெரிந்திருக்கும். ஒரு மாநிலத்தில் ஏதாவதொரு கட்சி ஆட்சியைப் பிடித்துவிட்டாலே, அதன் பின்னணியில் பி.கே.தான் (பிரசாந்த் கிஷோர்) இருப்பார் என அவர் ஒப்பந்தம் செய்யாத, வேலை செய்யாத கட்சிகளின் வெற்றிகள்கூட அவரின் பெயரில் போகிற போக்கில் வரவு வைக்கப்படும். காரணம், தேர்தல் அரசியல் களத்தில் பிரசாந்த் கிஷோர் எனும் பெயர் ஆரம்பகாலத்தில் ஏற்படுத்திய தாக்கம் அப்படி...!

பீகாரைச் சொந்த மாநிலமாகக் கொண்டவர் பிரசாந்த் கிஷோர். அடிப்படையில் பொறியாளரான இவர், ஐக்கிய நாடுகள் சபையில் பொது சுகாதாரம் சார்ந்த பணிகளில் எட்டு ஆண்டுகள் ஈடுபட்டு வந்தார். பொது சுகாதார ஆர்வலரான இவர், மேற்கு ஆப்பிரிக்காவின் சாட் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் உதவி மையத்தை தலைமை தாங்கி நடத்தினார்.

இந்தியாவுக்கு அவர் மீண்டும் வருவதற்கும், அரசியலில், அவர் கால் பதிப்பதற்கும் முக்கியக் காரணமாக அமைந்தது, இந்தியாவின் பொருளாதார வளம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு குறித்து அவர் உருவாக்கிய ஆவணம்தான். அது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து ஒவ்வொரு மாநிலத்துக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

அப்போது குஜராத் மாநில முதல்வராக இருந்த நரேந்திர மோடியின் கவனத்தை அதிகமாக ஈர்க்க, அவருடன் ஒரு காஃபி சந்திப்பு ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்த சந்திப்பின் முடிவிலேயே அவர் மோடியின் படையில் ஒருவராக மாறுகிறார்.
பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்முகநூல்

முதலில், குஜராத் மாநில அரசின் சுகாதாரக் கொள்கைகளை வகுக்க நியமிக்கப்பட்ட அவர், 2012 சட்டமன்றத் தேர்தலின்போது, மோடியின் தலைமை தேர்தல் வியூக வகுப்பாளராக மாறினார். அப்போது, 3d hologram உதவியோடு ஒரே நேரத்தில், 54 பேரணிகளில் பங்கேற்கும் வகையில் வியூகம் அமைத்தார். அது மிகப்பெரிய அளவில் கைகொடுத்தது.

அதனைத் தொடர்ந்து, 2014 நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்பட அப்போதும் பிரசாந்த் கிஷோரின் வியூகங்கள் தேவைப்பட்டது. அதற்காகவே சிஏஜி என்கிற அமைப்பு உருவாக்கபப்ட்டது. அதன் இயக்குநராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டார்.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

2014 நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை இந்திய அளவில் கொண்டு சேர்த்ததில் பிரசாந்த் கிஷோரின் பங்களிப்பு மிக அதிகம். அந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியையும் பிடித்தது. ஆனால், தேர்தல் முடிந்த சில காலத்தில் பாஜக தலைமைக்கும் அவருக்கும் கருத்து மோதல் உண்டாக, சி.ஏ.ஜி-யிலிருந்து வெளியேறுகிறார் பிரசாந்த் கிஷோர்.

பிரசாந்த் கிஷோர்
லோக் சபா தேர்தல்| பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்கணிப்பு.. தவறை ஒப்புக்கொண்ட பிரசாந்த் கிஷோர்!

‘பாஜகவை தோற்கடிப்பதே லட்சியம்’ என கங்கணம் கட்டிக்கொண்டு ஐபேக் என்கிற புதிய நிறுவனத்தை உருவாக்குகிறார் கிஷோர். அந்த நேரத்தில், பீகாரில் ஐக்கிய ஜனதா தளன், பாஜக கூட்டணி முறிந்து, நிதிஷ்குமார் தனித்துப் போட்டியிட, அப்போது நிதிஷ்குமாருக்காக வேலை செய்தார் பிரஷாந்த் கிஷோர். தொடர்ச்சியாக நிதிஷ்குமார் பீகாரின் முதல்வரானார்.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணைத் தலைவர் பொறுப்பு கிஷோருக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2017-ம் ஆண்டில் நடைபெற்ற உத்தரப்பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வேலை செய்தார் பிரசாந்த் கிஷோர். உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ், அகிலேஷ் கூட்டணி தோல்வியைத் தழுவினாலும், பஞ்சாபில் வெற்றியைப் பெற்றது. அதில், பி.கேவின் வியூகங்கள் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது.

பிரசாந்த் கிஷோர்
ஆந்திரா | 'எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்' - கொந்தளித்த ஷர்மிளா... நடப்பது என்ன?

அதனைத் தொடர்ந்து 2019-ல் ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் வேலை செய்ய அங்கு மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தார் ஜெகன். தொடர்ந்து 2020-ல் டெல்லியில் ஆம் ஆத்மிக்கும், 2021-ல் மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கும் தமிழ்நாட்டில் திமுகவுக்கும் வேலை செய்தார் பி.கே. அனைத்து மாநிலங்களிலும் அவர் வேலை செய்த கட்சிகள் வெற்றிவாகை சூடின. பிரசாந்த் கிஷோர் வேலை செய்த கட்சிகள் அனைத்துமே ஆட்சியைப் பிடித்துவிட்டன என்று சொல்ல முடியாது. ஆனால், பெரும்பான்மையாக அப்படித்தான். தவிர, வெற்றிபெற வாய்ப்புள்ள கட்சிகளுக்கு மட்டுமே பிகே வேலை செய்வார் என்கிற விமர்சனங்களும் அவர்மீது உண்டு.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

இநிந்லையில் தேர்தல் வியூக வேலைகளில் இருந்து விலகப் போவதாக அறிவித்தார் பிரசாந்த் கிஷோர். தொடர்ந்து அவர் காங்கிரஸ் கட்சியில் இணையப் போவதாகவும் தகவல்கள் வெளியான. காங்கிரஸ் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். ஆனால், அவர் இணையவில்லை.

இந்தநிலையில், மே 2, 2022-ம் ஆண்டு ஜன் சூராஜ் எனும் அமைப்பை தன் சொந்த மாநிலமான பீகாரை மையமிட்டு உருவாக்கினார் பிரசாந்த் கிஷோர். பீகாரில் பல்வேறு இடங்களுக்கு பாதயாத்திரை சென்றார். வரும் அக்டோபர் இரண்டாம் தேதி, அதை அரசியல் கட்சியாக மாற்றப்போவதாக அறிவித்துள்ளார். தவிர, அடுத்தாண்டு நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

சமீபத்தில், நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், “எனது கட்சி மக்கள் அரசாங்கத்தை அமைக்கும். கட்சி தொடங்கிய முதல் நாளிலேயே ஒரு கோடி உறுப்பினர்களை கொண்ட முதல் கட்சியாக ஜன் சூராஜ் கட்சி இருக்கும். புதிய கட்சி வரலாற்றில் இடம் பிடிக்கும். இந்தக் கட்சி எந்தவொரு குறிப்பிட்ட சாதி, குடும்பம் அல்லது சமூகத்துக்குள் நின்றுவிடாது. இது பீகார் மக்களின் கூட்டு முயற்சி. கட்சியை யார் வழிநடத்துவது போன்ற மற்ற விவரங்கள், உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்தார். அவரின் கட்சியில் பீகாரைச் சேர்ந்த பல முன்னணி அரசியல் தலைவர்கள் இணைந்து வருகின்றனர்.

பிரசாந்த் கிஷோர்
பீகார் | சட்டப்பேரவையில் பெண் எம்.எல்.ஏ.விடம் கோபப்பட்ட முதல்வர்.. எதிர்க்கட்சிகள் கண்டனம்!

பிகேவின் இந்த புதிய அரசியல் பிரவேசம், 2015-லிருந்து முதல்வராகப் பதவி வகித்துவரும் நிதிஷுக்கு நெருக்கடியைத் தருமா இல்லை, ஆட்சிக் கனவோடு பீகாரில் வளர்ந்துவரும் பாஜகவுக்கு நெருக்கடியைத் தருமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com