"பணப்பேராசை கொண்ட ட்விட்டர் மத்திய அரசை கட்டுப்படுத்த விரும்புகிறதா?” - கங்கனா ரனாவத்

"பணப்பேராசை கொண்ட ட்விட்டர் மத்திய அரசை கட்டுப்படுத்த விரும்புகிறதா?” - கங்கனா ரனாவத்
"பணப்பேராசை கொண்ட ட்விட்டர்  மத்திய அரசை கட்டுப்படுத்த விரும்புகிறதா?” - கங்கனா ரனாவத்
Published on

“பேச்சு சுதந்திரத்திற்காக கெஞ்சும் ட்விட்டர் பாராளுமன்றத்தின்  தேர்ந்தெடுக்கப்படாத உறுப்பினர்” என்று நடிகை கங்கனா ரனாவத் விமர்சித்துள்ளார்.

இந்தியாவில் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்து நிலவுவதாக சமூக வலைத்தள ஊடகமான ட்விட்டர் நிறுவனம் பத்திரிகை அறிக்கை மூலமாக தனது ஆதங்கத்தை தெரிவித்திருந்தது. அதற்கு, தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் நடிகை கங்கனா ரனாவத்  “பேச்சு சுதந்திரத்திற்காக கெஞ்சும் ட்விட்டர் பாராளுமன்றத்தின்  தேர்ந்தெடுக்கப்படாத உறுப்பினர். உலகின் நீதி,மனிதநேயத்தின் நீதி காப்பவர் அவர்களின் அடிப்படை தகுதி என்ன?  நம் சக்திகளை அடைய அடிப்படை சான்றிதழ் என்ன? அவர்கள் யார்?  எளிதில் வாங்கக்கூடிய மற்றும் விற்கக்கூடிய ஒரு சில பெருநிறுவன கைக்கூலிகள். followers யில் இருந்து விளம்பர டிவீட்கள் வரை எல்லாவற்றுக்கும் ஒரு விலை இருக்கு . இந்த பணத்தின் மேல் பேராசை கொண்ட  தனியார் முதலாளிகள் மற்றும் வணிகர்கள் இந்த நாட்டையும் அரசாங்கத்தையும்  கட்டுப்படுத்த விரும்புகிறார்களா? East india நிறுவனத்திடம் இருந்து நாம் எதையும் கற்றுக்கொள்ளவில்லையா?” என்று விமர்சித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com