சரிகிறதா மோடியின் சாம்ராஜியம்
சரிகிறதா மோடியின் சாம்ராஜியம்புதிய தலைமுறை

சரிகிறதா மோடியின் சாம்ராஜியம்? 2024 தேர்தல் முடிவில் திடீர் திருப்பம்!!

தற்போதைய நிலவரப்படி 295க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜகவும், 226க்கும் மேற்பட்ட தொகுதிகளில் I.N.D.I.A. கூட்டணியும் முன்னிலையில் இருக்கின்றன.
Published on

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், பாஜக கூட்டணி மற்றும் I.N.D.I.A. கூட்டணி இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி 294 தொகுதிகளில் பாஜகவும், 232-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் I.N.D.I.A. கூட்டணியும் முன்னிலையில் இருக்கின்றன.

18வது மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டு இன்றே முடிவுகள் வெளியாக இருக்கிறது. பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், மக்களவை தேர்தல் களத்தில் பாஜகவின் சாம்ராஜியம் சரிகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆம், 1984ம் ஆண்டு தொடங்கி, கடந்த 2019ம் ஆண்டில் நடந்த தேர்தல் வரை ஒற்றை இலக்கத்தில் தொடங்கி மூன்று இலக்கம் வரை மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றி கணிசமாக அதிகரித்த வண்ணம் இருந்தது. 1991ம் ஆண்டில் 120 தொகுதிகள், 1996ல் 161 தொகுதிகள், 1998ல் 182 தொகுதிகள் என்று தொடங்கி, 2014ம் ஆண்டு 282 இடங்களிலும் 2019ம் ஆண்டில் 303 இடங்களிலும் வென்றது பாஜக கூட்டணி.

சரிகிறதா மோடியின் சாம்ராஜியம்
மக்களவை தேர்தல் | காங்கிரஸ் vs பாஜக மக்களவை தேர்தலில் கடந்து வந்த பாதை!

இந்த நிலையில், தற்போதைய தேர்தலில் 350க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றிபெறும் என்று அக்கட்சியின் தலைவர்களும், வெற்றிபெறும் இடங்கள் 400 ஐ தாண்டும் என்று கருத்துக்கணிப்புகளும் தெரிவித்தன. ஆனால், இப்போதுவரை 290 என்ற அளவிலேயே பாஜக கூட்டணி முன்னிலையில் இருக்கிறது.

சரிகிறதா மோடியின் சாம்ராஜியம்
🔴LIVE: தேர்தல் முடிவுகள் 2024 | பெரும்பான்மை பெற்ற NDA; Tough Fight கொடுத்த I.N.D.I.A! முழு விவரம்

வெற்றிக்கு 272 இடங்கள் போதும் எனினும் பாஜகவின் மக்களவைத் தேர்தல் வரலாற்றில் இதுவரை காணாத இறங்கு முகம், இந்த தேர்தலில் காணப்படுகிறது தெரிகிறது. எதிர்க்கட்சிகள் இணைந்து வலிமையான கூட்டணி அமைத்ததும் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இதுவரை பாஜக 237 இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில் தெலுங்கு தேசம், ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மற்ற இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. கடந்த தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளை பாஜக தனியே வென்ற நிலையில், இந்த முறை அதற்கும் இழுபறி நீடித்து வருகிறது. கூட்டணி கட்சிகளின் ஆதரவோடுதான் ஆட்சியமைக்க வேண்டும் என்ற சூழல் நிலவி வருகிறது. அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை பொருத்திருந்தே பார்க்க வேண்டும்.

சரிகிறதா மோடியின் சாம்ராஜியம்
கேராளாவில் சுரேஷ் கோபி வெற்றி.. தென்னிந்தியாவில் I-N-D-I-A கூட்டணி-க்கு டஃப் கொடுத்த பாஜக!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com