தலை ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து முடித்துள்ளனர் ஒடிஷாவைச் சேர்ந்த மருத்துவர்கள்.
சில நேரங்களில் குழந்தைகள் பிறக்கும்போதே சோதனைகளை சந்திக்கின்றன. தற்போது வளர்ச்சியடைந்துள்ள நவீன மருத்துவ வசதிகளால் இந்தப் பிரச்னைகளை எளிதில் கையாள முடிகிறது.
ஒடிஷா மாநிலத்தின் கந்தமால் மாவட்டத்தில் ஜகன்னாத், பல்ராம் தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. பிறக்கும்போது தலைகள் ஒட்டியிருந்தன. குழந்தைகளின் இதயங்களில் இருந்து மூளைக்கு ரத்தம் எடுத்துச் செல்லப்படுகிறது. ஆனால் தலை ஒட்டியிருப்பதால் இந்த அறுவை சிகிச்சை ஆபத்தான ஒன்றாகக் கருதப்படுகிறது. எனவே மருத்துவர்கள் மிக கவனத்துடன் 20 மணி நேரம் போராடி குழந்தைகளின் தலையை பிரித்தனர்.
இதுபோன்று ஒட்டிப் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளுக்கு நடக்கும் அறுவை சிகிச்சைகளில் இறப்பு விகிதம் அதிகம். பெரும்பாலும் ஒரு குழந்தையைத்தான் காப்பாற்ற முடியும் அல்லது அறுவை சிகிச்சை முடிந்த 24 மணி நேரத்தில் ஒரு குழந்தை இறந்துவிடும். உலக அளவில் 2.5 மில்லியன் பிறப்புகளில் 40 சதவீதம் குழந்தைகள் மட்டுமே உயிருடன் உள்ளனர்.
ஒடிஷா இரட்டைக் குழந்தைகளின் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து அவர்கள் இருவருக்கும் உயிருக்கு எதுவும் ஆபத்து எதுவும் இல்லை. எனினும் அவர்கள் மருத்துவர்களால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.