“வீட்டிற்கே செல்லாமல் காரிலேயே தங்கும் மருத்துவர்”: நெகிழ வைக்கும் கொரோனா பணி

“வீட்டிற்கே செல்லாமல் காரிலேயே தங்கும் மருத்துவர்”: நெகிழ வைக்கும் கொரோனா பணி
“வீட்டிற்கே செல்லாமல் காரிலேயே தங்கும் மருத்துவர்”: நெகிழ வைக்கும் கொரோனா பணி
Published on

இந்தியா முழுவதும் இப்போது கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைத் தடுப்பதற்கு நாடு முழுவதும் மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை அமலில் இருக்கிறது. இந்த உத்தரவு நீட்டிப்பது குறித்து பல்வேறு மாநில அரசுகள் தொடர்ந்து மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

கொரோனா பரவலைத் தடுப்பதற்கு ஒரே வழி நம்மை நாமே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே அரசின் கோரிக்கை. இதுவரை இந்தியாவில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை என்றாலும் 5 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களைக் குணமாக்கும் முயற்சிகளில் மருத்துவர்கள் இரவுப் பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சையளிப்பதால் பெரும்பாலானவர்கள் தங்கள் வீடுகளுக்கே செல்வதில்லை. எங்கே தன் குடும்பத்தினரையும் கொரோனா வைரஸ் பாதித்துவிடும் என்ற அச்சம் இருப்பதால் பெரும்பாலான மருத்துவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்கின்றனர். இப்படிதான் மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலின் ஜே.பி.மருத்துவமனையில் வேலை செய்யும் மருத்துவர் சச்சின் நாயக் வீ்ட்டு செல்லாமல் தன்னுடைய காரிலேயே தங்கி வருகிறார்.

ஜே.பி. மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து வரும் சச்சின் நாயக், தன்னுடைய பணி முடிவடைந்த பின்பு வீட்டுக்குச் செல்லாமல் தன்னுடைய காரையே தங்குமிடமாக மாற்றியுள்ளார். எங்கே தான் வீட்டுக்குச் சென்றால் கொரோனா வைரஸ் தன் மனைவியையும் குழந்தையையும் பாதித்துவிடுமோ என்ற அச்சமே காரணம் என்று அவர் கூறியுள்ளார்.

மருத்துவமனை வளாகத்திலேயே தன்னுடைய காரை இருப்பிடமாக மாற்றியுள்ள சச்சின் நாயக், அதில் தன்னுடைய அத்தியாவசியப் பொருள்கள், புத்தகங்கள் ஆகியவற்றை வைத்துள்ளார். ஓய்வு நேரத்தில் காரில் வைத்திருக்கும் புத்தகங்களைப் படிப்பது. பின்பு, தன்னுடைய குடும்பத்தினரிடம் செல்போனில் வீடியோ கால் மூலம் பேசுவது என தனக்கான ஓய்வு நேரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த ஒரு வாரமாக வீட்டுக்கே செல்லாமல் காரிலேயே உறங்கியும் வருகிறார்.

இது குறித்துத் தெரிவித்துள்ள சச்சின் நாயக் "கடந்த சில நாள்களாக போபாலில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் நான் வீட்டுக்குச் செல்லாமல் என்னை நானே தனிமைப்படுத்திக்க முடிவு செய்தேன். எனவே நான் என்னுடைய காரிலேயே தங்கிவிடுவதென முடிவெடுத்தேன்" என்றார். சச்சின் நாயக் காரிலேயே தங்கும் போட்டோ வைரலானது, இது அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வரை சென்றது. அவரும் சச்சின் நாயக்கின் அர்ப்பணி்பபை வெகுவாக பாராட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com