மனைவியை கொலை செய்துவிட்டு அவரது பேஸ்புக்கை மட்டும் ஆக்டிவாக வைத்திருந்த கணவர்!

மனைவியை கொலை செய்துவிட்டு அவரது பேஸ்புக்கை மட்டும் ஆக்டிவாக வைத்திருந்த கணவர்!
மனைவியை கொலை செய்துவிட்டு அவரது பேஸ்புக்கை மட்டும் ஆக்டிவாக வைத்திருந்த கணவர்!
Published on

ஹரியானாவில் மருத்துவர் ஒருவர் தனது முன்னாள் மனைவியை கொலை செய்துவிட்டு மனைவியின் சமூக வலைதளத்தை தொடர்ந்து பயன்படுத்தி அவர் உயிருடன் இருப்பது போலவே அனைவரையும் நம்ப வைத்துள்ளார்.

ஹரியானாவின் கொராக்பூரைச் சேர்ந்தவர் மருத்துவர் தர்மேந்திர பிரதாப். தர்மேந்திராவுக்கு ஏற்கெனவே திருமணம் ஆன நிலையில் அவருடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக ராக்கி ஸ்ரீவஸ்தவா என்பவர் அவரை திருமணம் செய்துகொண்டார். இது தர்மேந்திராவின் குடும்பத்தில் பிரச்னையை ஏற்படுத்த ராக்கியை பிரிந்தார். அவரை பிரிந்த பிறகு மனிஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்  ராக்கி. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் ராக்கியும், மனிஷும் நேபாளம் சென்றுள்ளனர். சில நாட்களில் மனிஷ் மட்டும் ஊர் திரும்ப ராக்கி அங்கேயே இருந்துள்ளார். ஒரு மாதத்துக்கு பிறகு சகோதரியை காணவில்லை என ராக்கியின் சகோதரர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரணையை தொடங்கிய போலீசார் ராக்கியின் இரண்டாவது கணவரான மனீஷ் மீது சந்தேகம் அடைந்தனர். ஆனால் வழக்கில் திருப்புமுனையாக முதல் கணவரான தர்மேந்திர பிரதாப்பை கைது செய்துள்ளனர். தர்மேந்திராவும், அவரது சக நண்பர்கள் இருவரும் ராக்கியை குன்றில் இருந்து தள்ளி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ராக்கி காணாமல் போனதாக புகார் வந்தவுடன் முதல் கணவரின் தொலைபேசி அழைப்புகளை போலீசார் ஆய்வு செய்துள்ளனர். கொலையாளியின் தொலைபேசி அழைப்புகள் ராக்கி நேபாளத்தில் இருந்த நாட்களுடன் ஒத்துள்ளது. இதனையடுத்தே  தர்மேந்திர பிரதாப் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. ராக்கியின் தொலைப்பேசி அழைப்புகளை ஆய்வு செய்த போலீசார் உடனடியாக போக்ரா சென்று ராக்கியின் கொலை குறித்து துப்புதுலக்கியுள்ளனர்.

கொலை குறித்து கூறிய காவல் அதிகாரி, ''மனிஷ் நேபாளத்தில் இருந்து திரும்பியவுடன் கொலையாளியான தர்மேந்திர பிரதாப்பும் ,அவரது நண்பர்களும் நேபாளத்துக்கு சென்றுள்ளனர். அங்கு ராக்கியை சந்தித்து குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து கொடுத்து அவரை குன்றில் இருந்து தள்ளி கொலை செய்துள்ளனர்.

கொலை செய்த பிறகு ராக்கியின் செல்போனை எடுத்துக்கொண்ட கொலையாளிகள் அவரது சமூக வலைதளங்களை தொடர்ந்து பயன்படுத்தி அவர் குவகாட்டியில் இருப்பது போலவே அவரது குடும்பத்தினரையும் நம்ப வைத்துள்ளனர். நேபாளத்தில் இருந்து குவகாட்டிக்கு செல்போனை எடுத்து வந்த கொலையாளிகள் 3 மாதத்துக்கு மேலாக பயன்படுத்தியுள்ளனர். தர்மேந்திர பிரதாப் சொத்து பிரச்னை காரணமாக தனது முதல் மனைவியான ராக்கியை திட்டமிட்டு கொலை செய்துள்ளார்'' என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com