சீன உபகரணங்களை பயன்படுத்த வேண்டாம் - பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு அறிவுறுத்தல்?

சீன உபகரணங்களை பயன்படுத்த வேண்டாம் - பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு அறிவுறுத்தல்?
சீன உபகரணங்களை பயன்படுத்த வேண்டாம் - பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு அறிவுறுத்தல்?
Published on

பாதுகாப்பு பிரச்னைகள் இருப்பதால் சீன உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு கூற மத்திய அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய சீன எல்லையில் ஏற்பட்ட பிரச்னையில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பிலும் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்நிலையில் சீனா தற்போது இந்திய வங்கிகள் மற்றும் அரசு இணையதளங்களைக் குறி வைத்து தனது அடுத்தக்கட்ட சைபர் தாக்குதலை தொடங்கியுள்ளது. 

இந்தச் சூழ்நிலையில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல், மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் 4ஜி அலைவரிசை சேவையை மேம்படுத்த சீன உபகரணங்களை பயன்படுத்துவதை நிராகரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பாதுகாப்பு பிரச்னைகள் இருப்பதால் சீன உபகரணங்களை பயன்படுத்த வேண்டாம் என்று பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு அறிவுறுத்த மத்திய அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. எனவே இதுதொடர்பான டெண்டர்களை அதற்கேற்ப மாற்றவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com