கர்நாடக மாநிலத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் 17 பேரும் நாளை பாஜகவில் இணைய உள்ளதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் 17 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து அவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. அதில், இந்த 17 பேரின் தகுதி நீக்கம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல இவர்கள் அனைவரும் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 பேரும் நாளை பாஜகவில் இணைய உள்ளதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் நாளை காலை 10.30 மணியளவில் முதலமைச்சர் எடியூரப்பா மற்றும் மாநில பாஜக தலைவர் நளின் குமார் கட்டீல் முன்னிலையில் பாஜக இணைய உள்ளதாக கூறப்படுகிறது.